பசியைத் தூண்டும் கம்பு
30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கம்பு, சோளத்தை இடிப்பதற்காகவே, வீட்டுக்கு வெளியே உரல் இருக்கும்.
சிறுதானிய வகைககளில் உலக அளவில் அதிகம் பயிரிடப்படுவது கம்புதான்.
கம்பை, மாவாக வாங்கிப் பயன்படுத்துவதைவிட, ஒன்றிரண்டாக இடித்து, அரைத்துச் சாப்பிடுவது கூடுதல் பலன் தரும். கொரகொரப்பாக அரைத்து கம்பு உப்புமா செய்து சாப்பிடலாம்.
சிறுதானியங்கள், முழுதானியங்கள் என தானிய வகைகளில் மிக அதிக அளவு இரும்புச்சத்து கொண்டிருப்பது கம்பு. `அனீமியா’ என சொல்லப்படும் ரத்தசோகை நோயைப் போக்கும் ஆற்றல்கொண்டது. ரத்த சோகையைத் தவிர்க்கும்.
பசியைத் தூண்டும் ஆற்றல்கொண்டது. மலச்சிக்கலைப் போக்கும்.
அஜீரணக் கோளாறுகள் இருப்பவர்கள், கம்பங்கஞ்சி குடித்துவர நிலைமை சீராகும்.
கம்பு சோறு சாப்பிட்டுவந்தால், குடல் புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். உடலை குளுமையாக்கும்.இருமல், இரைப்பு நோய் உள்ளவர்கள், கம்பங்கஞ்சியைக் குறைவாக அருந்தவேண்டும்.
Labels:
health
No comments :
Post a Comment