ஜெயலலிதா வழக்கில் அன்பழகன் தரப்பு வாதத்தை கேட்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அன்பழகன் தரப்பு வாதத்தை கேட்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும், அன்பழகன் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இதனை விசாரணைக்கு எற்ற நீதிமன்றம். தொடர்ந்து இந்த விசாரணையை நடத்தி வந்தது.
கர்நாடக தரப்பு வாதங்களை மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா நேற்றுடன் நிறைவு செய்தார். இந்நிலையில் அன்பழகன் தரப்பு வாதங்களை வைக்க அனுமதி கேட்டனர். இதனை ஜெயலலிதா தரப்பு கடுமையாக எதிர்த்தது. வழக்கை தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு மாற்றியதுடன் அன்பழகன் தரப்பின் உரிமை முடிந்து விட்டது.
மேல் முறையீட்டு விசாரணையில் வாதம் பன்ன அன்பழகன் தரப்புக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என அவர்கள் ஜெயலலிதா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அன்பழகன் தரப்பு வாதத்தை தாக்கல் செய்ய என்ன முகாந்திரம் உள்ளது என கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் கர்நாடக தரப்பு போதுமான அளவுக்கு வாதம் செய்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் போது ஏற்கனவே அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படும் என நீதிபதிகள் உறுதியளித்தனர்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment