ஜீரண சக்தி மேம்படுத்தும் ஆப்ரிகாட்ஸ்
100 கிராம் ஆப்ரிகாட்டில் 25 கிராம் நார்ச்சத்து உள்ளது. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்தசோகையைக் கட்டுப்படுத்தும். கரோட்டினாய்டு, பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளதால், கண் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். நார்சத்து நிறைந்துள்ளதால், ஜீரண சக்தி மேம்படும். மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இதில் உள்ள பொட்டாசியம், சீரான எடைப் பராமரிப்புக்கு உதவும். இதில் உள்ள பைட்டோ நியூட்ரிஷியன்ட்ஸ், சருமத்தைப் பொலிவாக வைத்திருக்கும். இ கால்சியம் நிறைந்துள்ளது. ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற எலும்பு அடர்த்திக் குறைபாட்டைத் தடுக்கும்.
Labels:
health
No comments :
Post a Comment