செரிமானத்துக்கு உதவும் புளி !
செரிமானத்துக்கு உதவும் புளி ! புளி, பித்தத்தை அதிகரிக்கும். செரிமானத்துக்கு உதவும். குமட்டல் இருக்கும் சமயங்களில் புளியைக் கரைத்து, வெல்லம், மிளகுத் தூள் சேர்த்து, தண்ணீரில் கலந்து குடித்தால், நிவாரணம் கிடைக்கும். புளி ரசம் வைத்துச் சாப்பிடலாம். புளியில் ‘டார்டாரிக் அமிலம்’ உள்ளது. அதிகமாகச் சாப்பிட்டால், உடலில் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே, அளவாகவே சாப்பிட வேண்டும். பசி இன்மை, மந்த உணர்வு இருப்பவர்கள் புளி சாப்பிடுவது நல்லது. அல்சர் இருப்பவர்கள் புளியை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது. சிலர், அடிக்கடி புளி சாதம் சாப்பிடுகிறார்கள், இது தவறு. மாதம் ஒரு முறை வேண்டுமானால் சாப்பிடலாம், அடிக்கடி சாப்பிடக் கூடாது.
Labels:
health
No comments :
Post a Comment