விராட் கோலியை தெண்டுல்கருடன் ஒப்பிடக்கூடாது : கபில்தேவ்

Share this :
No comments

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருடன், தற்போதைய இந்திய டெஸ்ட் மேட்ச் கேப்டன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். சமீபகாலமாக விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 ஆட்டங்களிலும், அவர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இதன் மூலம் உலகில் உள்ள தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவரை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரோடு பலரும் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி கருத்து கபில்தேவ் “விராட் கோலியை, சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிடுவது தவறானது. அதற்கு அவசியம் இல்லை. எங்கிருந்து இந்த ஒப்பீடு வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. தெண்டுல்கர் ஒரு சகாப்தம்,. விராட் கோலி ஆரம்ப கட்டத்தில் விளையாடி வருகிறார். எனவே அவர்கள் இருவரையும் ஒப்பீட்டு பேசக்கூடாது. நடந்த முடிந்த 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சிறப்பாக விளையாடியது. எதிர் அணி நம்மை விட சிறப்பாக விளையாடும் போது தோல்வி தவிர்க்க முடியாதது” என்று அவர் கூறினார்.

No comments :

Post a Comment