எம்எஸ் எக்செல் பயன்பாடு எஸ்கியூஎல் சேவையாளர் ஆகிவற்றுக்கிடையே தரவுகளை பரிமாறிகொள்ளுதல்

Share this :
No comments


எம்எஸ் எக்செல் எஸ்கியூஎல் சேவையாளர் தரவுதளம் ஆகிய இரண்டிற்குமிடையே தரவுகளை பறிமாறிகொள்வதற்காக எஸ்கியூஎல் சேவையாளர்2014 எனும் பயன்பாடு ஏராளமான வழிமுறைகளை நமக்கு வழங்குகின்றது அதில் ஒரு வழிமுறைதான் எஸ்கியூஎல் சேவையாளர் பதிவேற்ற,பதிவிறக்க வழிகாட்டியாகும் இந்த பணியானது எஸ்கியூஎல் சேவையாளர்ஒருங்கிணைப்பு பணி (SQL Server Integration Services (SSIS)) என்பதன் அடிப்படையில் வழங்கபடுகின்றது இந்த சேவையை பெறுவதற்காக முதல்வழிமுறையாக Start =>All Programs =>Microsoft SQL Server =>Import and Export Data => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுஇரண்டாவது வழிமுறையாக SQL Server Data Tools (SSDT) என்பதில் உள்ள SSIS Packages folder எனும் கோப்பகத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் SSIS Import and Export Wizard என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது மூன்றாவது வழிமுறையாக SQL Server Data Tools எனும் திரையின் மேலே கட்டளைபட்டையில் Project => SSIS Import and Export Wizard =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது நான்காவது வழிமுறையாக SQL Server 2014 Management Studio, எனும் திரையில் Database Engine server type என்பதை இணைப்பு ஏற்படுத்துக அதன்பின்னர் ஏதேனும் Database மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Tasks=> Import Data or Export data => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் எஸ்கியூஎல் சேவையாளர் பதிவேற்றபதிவிறக்க வழிகாட்டி திரையில் தோன்றிடும் இந்த வழிகாட்டியின் உதவியுடன் தரவுகளை எஸ்கியூஎல் சேவையாளரிலிருந்து எக்செல்லிற்கு தரவுகளை பதிவேற்றம் எவ்வாறு செய்வது என காண்போம்

இந்தவழிகாட்டி திரையில் உள்ள Data Source ,Server Name,Authentication , Database ஆகிய வற்றில் தேவையான விவரங்களுடன் கட்டமைவுசெய்துகொண்டபின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக


1

அடுத்து விரியும் இதே வழிகாட்டியின் இரண்டாவது திரையில் Destination என்பதன் கீழிறங்கு பட்டியிலிருந்து சென்றுசேரவேண்டிய இடத்தையும் Excel File Path என்பதில் சரியான வழியையும் Excel Version என்பதன் சரியான எக்செல்பதிப்பையும் தெரிவுசெய்து கொண்ட அல்லது உள்ளீடு செய்துகொண்ட பின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக


2

அடுத்து விரியும் இதே வழிகாட்டியின் மூன்றாவது திரையில் இருவாய்ப்புகள் உள்ளன அவற்றுள் Copy data from one or more tables or views என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டபின்னர் பின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.


3

அடுத்துவிரியும் இதே வழிகாட்டியின் நான்காவது திரையில் Select Source Tables and Views என்பதன் கீழ் விரியும் தேவையான தரவுதள கோப்பினை HumanResources.Department என்றவாறான அட்டவணையை தெரிவுசெய்துகொண்டபின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
4

அடுத்து தோன்றிடும் இதே வழிகாட்டியின் ஐந்தாவதான Review Data Type Mapping எனும் திரையில் ஒன்றும் செய்யவேண்டாம் Next என்ற பொத்தானைமட்டும் தெரிவுசெய்து சொடுக்குக

5

அடுத்து தோன்றிடும் இதே வழிகாட்டியின் ஆறாவது திரையில் பாதுகாப்பிற்கான கடவுச்சொற்கள் விவரங்களை உள்ளீடுசெய்துகொண்டு இந்த கோப்பினை சேமித்திடவும் அதன்பின்னர் இயங்கசெய்திடவும் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டபின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அடுத்து தோன்றிடும் இதே வழிகாட்டியின் ஏழாவது திரையில் Finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த தரவுகளை எக்செல்லிற்கு பதிவேற்றும் செய்திடும் பணியை முடிவிற்கு கொண்டுவருக
6

இரண்டாவதாக எம்எஸ்எக்செல்லிலிருந்து எஸ்கியூஎல் சேவையாளருக்கு தரவுகளை பதிவிறக்கம் செய்தல் வழிமுறையை காண்போம்

இதே வழிகாட்டயின் பதிவேற்ற வழிமுறையின் இரண்டாவது படிமுறையில் குறிப்பிட்டவாறு Destination என்பதன் கீழிறங்கு பட்டியிலிருந்து சென்றுசேரவேண்டிய இடத்தையும் Excel File Path என்பதில் சரியான வழியையும் Excel Version என்பதன் சரியான எக்செல்பதிப்பையும் தெரிவுசெய்து கொண்ட அல்லது உள்ளீடு செய்துகொண்ட பின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அடுத்து தோன்றிடும் இதே வழிகாட்டியின் பதிவேற்ற வழிமுறையின் முதலாவது படிமுறை திரையில் குறிப்பிட்டவாறு Data Source ,Server Name,Authentication , Database ஆகிய வற்றில் தேவையான விவரங்களுடன் கட்டமைவுசெய்துகொண்டபின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அடுத்துதோன்றிடும் மூன்றாவது திரையில் Select Source Tables and Views என்பதன் கீழுள்ள Regions என்பதை தெரிவுசெய்துகொண்டபின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
7

அடுத்துதோன்றிடும் நான்காவது திரையில் இந்த கோப்பினை சேமித்திடவும் அதன்பின்னர் இயங்கசெய்திடவும் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டபின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அடுத்து தோன்றிடும் இதே வழிகாட்டியின் இறுதி திரையில் Finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த தரவுகளை எக்செல்லிற்கு பதிவிறக்கம் செய்திடும் பணியை முடிவிற்கு கொண்டுவருக

No comments :

Post a Comment