பாமக வேட்பாளர் பட்டியலில் சாதனை: முதன் முறையாக முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்குகிறது

Share this :
No comments

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் பட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதன்படி, இந்த தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 45 பேர் கொண்ட முதல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 45 வேட்பாளர்களில் 2 முஸ்லீம் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். பாமக தேர்தல் வரலாற்றில் அவர்கள் இதுவரை முஸ்லீம் வேட்பாளர்களை அறிவித்ததில்லை. நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமனியிடம் ஒரு பார்வையாளர் பகிரங்கமாக இந்த கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளித்த அன்புமணி இந்த முறை அது மாதிரி இருக்காது, முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கூறினார். இந்நிலையில் இன்று வெளியான முதற்கட்ட 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 2 முஸ்லீம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கசாலி, திருப்பூர் தெற்கு தொகுதியில் தி.சை. மன்சூர் ஆகியோர் பாமகவின் முஸ்லீம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment