இணையதள பக்கங்களை உருவாக்கபயன்படும் கட்டற்றகருவிகளின் பயன்பாடுகள்

Share this :
No comments
1. Node.jsஎனும் கட்டற்ற கருவியானது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது. இது சேவையாளர்களுக்கான இணைய பயன்பாடுகளை உருவாக்கிட பயன்படுகினறது . இது 2009 இல் வெளியிடபட்டது மிகவேகமாகவும் மிகதிறனுடன் செயல்படக்கூடியஇது ஒரு ஜாவாஸ்கிரிப்டின் இயக்கநேர பயன்பாடாக கூகுள்குரோமின் ஜாவாஸ்கிரிப்ட் பொறிக்காக கட்டமைக்கப்பட்டதாகும் 2.Angularjsஎன்பது இயக்கநேர இணைய பயன்பாடுகளுக்கான ஒரு ஜாவாஸ்கிரிப்ட் வரைச்சட்டமாகும். இது ஒரு கட்டற்ற பயன்பாடாக எம்ஐட்டி அனுமதியின் அடிப்படையி்ல் வெளியிடபட்டுள்ளது இது தரவுகட்டையும் வடிகட்டுதலையும ஹெச்டிஎம்எல்லுடன் ஆதரிக்கின்றது. இது படிவங்கள் அதனுடைய ஏற்புகை ஆகியவற்றை ஆதரிக்கின்றது . 3. Ember.js என்பதும் ஒரு ஜாவாஸ்கிரிப்ட்வரைச்சட்டமாகும் இது 2011 இல் வெளியிட பட்டது இது மிகவிருப்பமான ஒற்றை யான இணையபக்க பயன்பாடுகளுக்கான ஜாவாஸ்கிரிப்ட் வரைச்சட்டமாக விளங்குகின்றது 4.Firebug இது பெரும்பாலான இணைய பயன்பாடுகளை உருவாக்குபவர்களால் பயன்படுத்தபடும் ஒரு மிகச்சிறந்த கட்டற்ற கருவியாகும் இது மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸின் நீட்சியாக திருத்துதல் பிழைகளை சரிசெய்தல் சிஎஸ்எஸ் ஐ நிருவகித்தல் ஆகிய பணிகளுக்காக கிடைக்கின்றது . இது 2006 இல் வெளியிடபட்டது 5.XAMPPஇதுவும் இணைய பயன்பாடுகளை உருவாக்குபவர்களால் பயன்படுத்தபடும் ஒரு மிகச்சிறந்த கட்டற்ற கருவியாகும் இது தன்னுடைய செயல்பாட்டிற்காக மைஎஸ்கியூஎல் ஐ பயன்படுத்திகொள்கின்றது இதனை செயல்படுத்தி பயன்படுத்திடுவதற்காக பிஹெச்பி போன்றவைகளை கட்டமைவு செய்திடவேண்டும் என கவலைப்படாமல் பயனாளர்கள் தங்களுடைய பணியை விரைவாக துவக்கமுடியம் இது அனைத்து தளங்களிலும் செயல்படும் ஒரு சிறந்த கட்டற்ற கருவியாகும் 6.Brackets என்பது ஹெச்டிஎம்எல் ,சிஎஸ்எஸ் ஜாவாஸ்கிரிப்ட் ஆகியவற்றிற்காக மிகப்பிரபலமான கட்டற்ற கருவிபதிப்பானாக அமைந்துள்ளது இதுமிகவிரைவாக செயல்படும் தன்மைகொண்டது நாம் இணைய பயன்பாடுகளை உருவாக்கிடும்போதே அதனை மாதிரி காட்சியாக நம்முடைய இணைய உலாவியில் கண்டு சரிசெய்திட அனுமதிக்கின்றது. இது 2014 இல் வெளியிடபட்டது 7. Atomஎன்பது 21 ஆம் நூற்றான்டின் ஒருமிகச்சிறந்த உரைபதிப்பானாகும் இது கட்டற்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் சிறந்ததொருகருவியாகும் நாம் ஏதேனும் சொற்களை இதில்தட்டச்சு செய்தால் தானாகவே மிகுதி எழுத்துகளை பூர்த்தி செய்துகொள்ளும் திறன்கொண்ட இணைய பயன்பாடுகளை விரைவாக உருவாக்கபயன்படும் ஒரு கட்டற்ற கருவியாகும்

No comments :

Post a Comment