நம்ம இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்ன படிச்சிருக்காங்கன்னு தெரியுமா?

ஒன்றை பெற வேண்டும் எனில், ஒன்றை இழக்க வேண்டும் என்பது உலக நியதி. இது நூறு சதவீதம் உண்மை என்பது நமது இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை பார்த்து நாம் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. பெரும்பாலும், அனைவரும் பள்ளிப் படிப்போடு நின்றவர்கள். காரணம், இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற பேரார்வம். சிலர் எம்.பி.பி.எஸ், இன்ஜினியரிங் போன்ற பட்டப்படிப்புகளை கூட படிக்க, படிக்க கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது என பாதியில் மட்டையும், பந்தையும் கையில் எடுத்துக் கொண்டு ஓடிவந்துள்ளனர். மிக எளிதாக ஓரிரு போட்டிகளில் நமது வீரர்கள் சோபிக்கவில்லை எனில், நாம் வசைப்பாடி விடுகிறோம். ஆனால், நம்மை விட அதிகம் வருந்துபவர்கள் அவர்கள் தான். அந்த நேரத்தில் தான் நாம் அவர்களை தேற்றிவிட வேண்டுமே தவிர தூற்றிவிட கூடாது. இனி இந்திய கிரிக்கெட் வீரர்களின் கல்வி தகுதி பற்றி காணலாம்... சவுரவ் கங்குலி தாதா என செல்லமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் சவுரவ் செயின்ட். சேவியர் கல்லூரியில் காமர்ஸ் படிப்பு முடித்துள்ளார். மேலும் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் அளிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் சச்சின் பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான். கிரிக்கெட்டின் கடவுள், இவ்விளையாட்டில் கொண்ட பேரார்வத்தினால் பள்ளிப் படிப்போடு முடித்துக் கொண்டார். இவர் ஷார்தஷ்ரம் வித்யாமந்திர் எனும் பள்ளியில் படித்தார். வி.வி.எஸ். லக்ஷ்மன் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர். இந்திய கிரிக்கெட் அணியில் மிக அதிகமாக படித்தவர் இவர் தான். இவர் எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டிருக்கும் போதே கிரிக்கெட் வாய்ப்பு கிடைத்தால் விளையாட மட்டையை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார். யுவராஜ் சிங் இவர் டி.எ.வி பப்ளிக் ஸ்கூலில் படித்தவர். 12-ம் வகுப்பிற்கு மேல் இவர் படிப்பை தொடரவில்லை. இவரது தந்தை முழுவீச்சில் இவரை கிரிக்கெட்டில் பயணிக்க கூட்டி வந்துவிட்டார். அஜித் அகார்கர் சச்சின் படித்த அதே ஷார்தஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர் தான் அஜித்தும். இவர் மாதுங்காவில் இருக்கும் ரூபாரெல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். அணில் கும்ப்ளே ராஷ்ட்ரிய வித்யாலயா கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் இந்தியாவின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே. ஜவகல் ஸ்ரீநாத் மைசூரில் உள்ள ஜெயசாம் ராஜேந்திர கல்லூரியில் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் முடித்துள்ளார் ஜவகல் ஸ்ரீநாத். ஜாகிர்கான் ஸ்ரீராம்பூரில் பள்ளிப்படிப்பை முடித்த ஜாகீர்கான், இன்ஜினியரிங் படிக்க சென்றார். நன்கு படிக்கும் மாணவராக இருந்த போதிலும் கூட கிரிக்கெட் மீதிருந்த ஆர்வம், அவரை இதனுள் அழைத்துவந்துவிட்டது. தல தோணி பத்தாம் வகுப்பு முடித்த கையோடு கிரிக்கெட்டில் இனைந்துவிட்டார், பிறகு 12-ம வகுப்பு முடித்தார். கிரிகெட் விளையாட துவங்கிய பிறகு மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்தார். கெளதம் காம்பீர் டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் படிப்பை முடித்த காம்பீர். டெல்லி பல்கலைகழகத்தின் ஹிந்து கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். விராட் கோலி விஷால் பாரதி பப்ளிக் ஸ்கூலில் படித்த கோலிக்கு சிறுவயது முதலே கிரிக்கெட்டில் தான் ஆர்வம். கிரிக்கெட் பயிற்சி பெற வேண்டும் என பிறகு சேவியர் கான்வென்ட்டுக்கு மாறினார். இவர் 12வது வரை தான் படித்துள்ளார். ஆனால், படிப்பிலும் செம சுட்டியாம் கோலி. சுரேஷ் ரெய்னா சுரேஷ் ரெய்னா பள்ளிப்படிப்பை தான் மமுடித்துள்ளார். இவர் U-17, U19 என பதின் வயதுகளிலேயே இந்திய தேசிய அணிக்காக விளையாட துவங்கிவிட்டார். ரஹானே ரஹானே எஸ்.வி ஜோஷி மேல்நிலை பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளி படிப்பு இதே போல ஷிக்கிர் தவான், உமேஷ் யாதவ், ஸ்டுவார்ட் பென்னி என பெரும்பாலானோர் கிரிக்கெட்டில் ஜொலிக்க பள்ளிப்படிப்போடு நின்றவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
other
,
sports
No comments :
Post a Comment