உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் சோம்பு !
சோம்புக்கு, பெருஞ்சீரகம் என்ற பெயரும் உண்டு. சோம்பை வறுத்து, தண்ணீர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மாதவிடாய் ஆரம்பித்த இளம்பெண்கள் சோம்பு நீர் அருந்துவது மிகவும் நல்லது. சோம்பு, செரியாமைக்கு மிகவும் சிறந்த தீர்வு. சிறுநீரைப் பெருக்கி, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். சோம்பை அப்படியே மென்று சாப்பிடலாம். பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடும்போது, அதில் சேர்க்கப்பட்டு இருக்கும் எண்ணெய்கள் காரணமாக, வயிற்றில் வலி ஏற்படும். இதைத் தவிர்க்கவே, பிரியாணி சாப்பிட்ட பின்னர் சோம்பைச் சாப்பிடுகிறார்கள். 10 மி.லி சோம்புத் தீநீருடன் (சித்த மருந்துக் கடையில் கிடைக்கும்) ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்தினால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
Labels:
health
No comments :
Post a Comment