ஓபாமாவை வரவேற்ற குட்டி இளவரசர் ஜார்ஜ், சமூக வலைதளங்களில் வைரலாகும் படம்

Share this :
No comments

லண்டன், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று இரவு திடீர் பயணமாக கென்சிங்டன் அரண்மைனைக்கு இரவு விருந்திற்காக சென்றார். ஒபாமாவுடன் அவரது மனைவி மிட்செல் ஒபாமாவும் சென்றிருந்தார். கென்சிங்டன் அரண்மைனை சென்ற ஒபாமாவுக்கு அங்கு குட்டி இளரவசர் ஜார்ஜ் வரவேற்பு அளித்து அசத்தினார். ஒபாமாவை வரவேற்பதற்காக தூங்கமால் ஜார்ஜ் விழித்து இருந்தார். இரவு நேர உடையான வெள்ளை நிற பைஜாமா கவுனையும் சாதாரண ஸ்லிப்பர்ஸ் செருப்பையும் அணிந்து இருந்த ஜார்ஜ், ஒபாமாவை கை குலுக்கி வரவேற்றார். பின்னர் தனக்கு பிடித்தமான ராக்கிங் குதிரையுடன் விளையாட சென்றுவிட்டார். இந்த படங்களை கென்சிங்டன் அரண்மைனை வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. முன்னதாக, பிரிட்டனின் மகாராணியாக கடந்த 64 ஆண்டுகளாக இருந்துவரும் எலிசபெத் அரசி தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடினார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

No comments :

Post a Comment