தொப்பிக்காக புலி கூண்டிற்குள் குதித்த இளம் பெண்! - நடந்தது என்ன? (வீடியோ)

Share this :
No comments


கனடாவில் உள்ள விலங்குகள் பூங்காவில், புலி கூண்டிற்குள் தவறி விழுந்த தொப்பியை எடுக்க இளம் பெண் ஒருவர் உள்ளே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொரேன்டோவில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றிற்கு, அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் சிலர் சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளனர். புலி அடைத்து வைக்கப்பட்டுள்ள கூண்டிற்குள் அருகில் அவர்கள் வந்தபோது, பெண் ஒருவரின் தொப்பி தவறி கூண்டிற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

புலி, கூண்டிற்குள் அருகிலேயே சுற்றி திரிவதை பார்த்த அந்த பெண், எவ்வித அச்சமும் இன்றி திடீரென கூண்டிற்குள் குதித்துள்ளார். தனது எல்லைக்குள் ஒருவர் நுழைந்துள்ளதை கண்ட அந்த புலி ஆவேசமாக அந்த பெண்ணை நோக்கி பாய்ந்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணிற்கும் புலிக்கும் இடையே ஒரு மெலிதான இரும்புக் கம்பி வேலி இருந்ததால், புலி அவரை நெருங்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்துள்ளது. தொப்பியை எடுத்துக்கொண்ட அந்த பெண் கூண்டை தாண்டி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் பூங்காவின் பாதுகாவலரான ஜெனிபர் என்பவர் கூறுகையில், ‘பெண்ணின் இந்த செயல் மிகவும் மோசமானது. ஆவேசம் அடைந்த அந்த புலி மெலிதான அந்த வேலியை தாக்கியிருந்தால், பெண்ணின் நிலைமை ஆபத்தில் முடிந்திருக்கும். எனினும், இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் பூங்கா ஊழியர்களிடம் பாதுகாப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.

No comments :

Post a Comment