"Be Our Pondatti" by IIT Madras Students - Arranged Marriage Parody of "Call Me Baby",

Share this :
No comments

நிறம் இப்படி வேண்டும், உயரம் இவ்வளவு தான் வேண்டும் என்று பெண் தேடும் பட்டியல் வரும் மேட்ரிமோனியல் விளம்பரங்களை பார்த்திருப்போம். இது போன்ற விளம்பரங்கள், போகிற போக்கில் பெரிய விவாதங்களை ஏற்ப‌டுத்தாது.ஆனால் ஆழமாக சிந்தித்தால் பெண் உரிமை சார்‌ந்து பல கேள்விகளை எழுப்புகின்றது. இப்படிபட்ட கேள்விகளை சுமந்து‌ இனிக்கும் இசையுடன் வெளிவந்துள்ளது ஒ‌ரு விழிப்புணர்வு பாப் இசை பாடல்.‌..

அஷ்மிதா கோஷ், அனுக்ருபா இளங்கோ, க்ருபா ‌சென்னை ‌ஐஐடி மாணவர்களான இவர்கள் தான் தற்போது சென்னையின் டாக் ஆப் தி டவுன்.காரணம் இந்த வீடியோ.

நாகரீகம் வளர்ந்து விட்ட இந்த கால கட்டத்திலும் திருமணம் எனும் நிகழ்வும், திருமணத்திற்கு பிறகான பெண்ணின் வாழ்க்கையும் எப்படி உள்ளது என்பதை மையக் கருவாக கொண்டு இந்த பாப் இசை பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் என்பவள் திருமணத்திற்கு மு‌ன்னும், பின்னும் இப்படித்தான் இ‌ருக்க வேண்டும் எ‌ன்று சமூகம் விதிக்கும் கட்டளைகளை இனிய இசையால் உடைத்துள்ளனர் இந்த மூன்று பெண்கள்.

மாப்பிள்ளைக்கு கைநிறைய சம்பளம், ஆறடி உயரம்,சொந்த வீடு உள்ளது,அம்மா செல்லம் என கூறி தங்களுக்கு ஏற்ற பெண்ணாக ஒல்லியான தேகம்,நல்ல நிறம்,வட்டமாக சப்பாத்தி சுட வேண்டும் எனக் கூறி வரன் தேடும் ஒரு மணமகனின் தாய் பாடுவதாக இந்த பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.இப்படி இருக்கும் பெண் எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டால் உன் சுய வாழ்க்கையை இழந்திடு என சிரித்துக்கொண்டு அழுத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் தா‌ன் வரதட்சனை கொடுமைகள் அதி‌கம் உள்ளது என்ற கருத்தோட்டம் இரு‌க்கும்.‌ அதேபோல் மேல் தட்டு குடும்பங்களிலும் வரதட்ச‌னை எந்த வடிவத்தில் உ‌ள்ளது எ‌ன்பதும் இந்த பாடல் மூலம் வெளிக்கொண்டு வரப்படுகிறது

இந்த ‌ பாடல் போட்டி முடிவுகள் இன்னும் வரவில்லை என்றாலும், வரன் பார்க்கும் படலத்தில் இனியாவது மாற்றம் வர வேண்டும் என்ற பார்வையை அழுத்தமாக பாடி பதிவுசெய்கின்றனர் இவர்கள்.

No comments :

Post a Comment