குருவை இயக்கும் சிஷ்யர் ஏ.ஆர்.முருகதாஸ்

Share this :
No comments


எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தில் முருகதாஸ் இயக்குனர் முருகதாஸாகவே ஒரு காட்சியில் தோன்றினார். இப்போது சிஷ்யனின் முறை.

முருகதாஸ் தமிழ், தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கிய வேடம் தந்துள்ளார். யட்சன், இறைவி, நெஞ்சம் மறப்பதில்லை படங்களில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு பெரிய வாய்ப்பு இது.

முன்பு பல படங்களில் நான் நாயகனாக நடித்திருந்தாலும் இப்போதுதான் என்னை ஒரு முழுமையான நடிகராக உணர்கிறேன் என கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

100 சதவீதம் உண்மை.

No comments :

Post a Comment