ஆரம்பமே குழப்பம்... அஜித் ரசிகர்களை ஏமாற்றிய தயாரிப்பு நிறுவனம்
அஜித்தின் 57 -வது படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க சிவா இயக்குகிறார்.
படத்துக்கான சிறப்புப் பக்கத்தை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இன்று மாலை 5.7 மணிக்கு தொடங்குவதாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு காரணமாக ரசிகர்கள் ஆவலுடன் சிறப்புப் பக்கத்தை காண காத்திருந்தனர். ஆனால், அவர்கள் சொன்னபடி எந்தப் பக்கமும் தொடங்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், சிறப்புப் பக்கத்தை வெளியிடுவதாக அறிவித்த சத்யஜோதி ஃபிலிம்ஸே, தல 57 படத்திற்கான புதிய பக்கம் வேறொரு நாளில் தொடங்கப்படும் என்று அறிவித்தது. மேலும் ரசிகர்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பும் கேட்டுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் இன்னும் கொஞ்ச காலம் இந்த படத்தை பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment