ஹனிமூன் செல்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய 10 டிப்ஸ்கள் இதோ...!

ஹனிமூன் என்பது வாழக்கையில் காலம் கடந்தும் நினைவில் நிற்கும் அனுபவம். எனவே உங்கள் ஹனிமூன் பயணத்தை மிகுந்த கவனத்துடன் திட்டமிடுங்கள். 1. ஹனிமூனுக்கு, நீங்கள் திட்டமிடும் காலத்திற்கு தக்கபடியான இடத்தை முடிவுசெய்யுங்கள். சம்பந்தப்பட்ட ஊருக்கு செல்வதற்கான பேருந்து, ரயில், விமான வசதிகள் பற்றியும் முன்கூட்டியே தெரிந்து வைத்திருங்கள். 2. செல்லும் இடத்துக்கு முன்கூட்டியே (திரும்புவது உள்ளிட்ட) டிக்கெட் பதிவு செய்யுங்கள். பயணம் செல்ல வேண்டிய தினத்தில் சீக்கிரமே சென்று, உங்களது இருக்கைகளை உறுதி செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். 3. நீங்கள் செல்லவிருக்கும் இடத்தைப் பற்றிய புத்தகங்களை படியுங்கள். அந்த இடம் குறித்து இணைய தளத்தில் உள்ள விவரக் குறிப்புகளையும் படித்து தெரிந்து வைத்திருங்கள். தங்குமிடம், எங்கு உணவு நன்றாக இருக்கும், எங்கிருந்து பேருந்துகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டால் அலைச்சலை தவிர்க்கலாம். 4. நீங்கள் செல்லும் இடத்தின் அருகில் பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்ளுங்கள். அதில், அருகில் உள்ளதையும் தொலைவில் இருக்கும் இடத்தையும் பட்டியலிட்டு அருகில் இருக்கும் முக்கியமான தலங்களை முதலில் சென்று பாருங்கள். 5. சுற்றுலா செல்லும் பகுதியில் தங்கும் இடங்களை மிக நிதானமாக தேர்வு செய்யுங்கள். முடிந்தால் அங்கு உங்களுக்கு அறிமுகமானவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் தங்குமிடம் பற்றி கலந்தாலோசித்து முடிவெடுங்கள். அதில் அவசரப்பட்டு பின்னர் அவதிப்பட வேண்டாம். 6. விடுதி அல்லது ஹோட்டல்களில் தங்கும்போது உங்களின் விலை உயர்ந்த பொருட்களையோ அல்லது ரொக்கப் பணத்தையோ அறையில் வைத்து விட்டுச் செல்ல வேண்டாம். படுக்கை அறை மற்றும் குளியறையில் சந்தேகப்படும்படியான எலக்ட்ரானிக் பொருட்கள் மினி கேமரா அல்லது தேவையற்ற இணைப்புகள் மறைத்துவைக்கப்ட்டிருக்கிறதா என ஆரம்பத்திலேயே உறுதிசெய்யவும். குறிப்பாக முகம் பார்க்கும் ஆளுயுர கண்ணாடி பாதரசத்திலானதா அல்லது வேறு சிறப்பு முறையில் இருக்கிறதா என பார்க்கவும். அறையில் உறுத்தும் எந்த விஷயத்தை பற்றியும் உடனடியாக விடுதி நிர்வாகியிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும். 7. வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது, தங்கும் இடத்தில் பணியாற்றும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை எதையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். 8. வெளியூர்களுக்கு சென்ற இடத்தில், சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களுக்கு காலையிலேயே சீக்கிரமாக கிளம்புமாறு திட்டமிடுங்கள். அதனால் இரவில் சீக்கிரமே அறைக்கு திரும்ப முடியும். 9. நீங்கள் செல்லும் இடத்துக்கென சில தனிச்சிறப்புகள் இருப்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் செயல்படுங்கள். தனிச்சிறப்பு மிகுந்த பொருட்களை வாங்கினால் அதன் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள தவறாதீர்கள். 10. எளிதில் உலரக்கூடிய ஆடைகளை கொண்டு செல்லுங்கள். அளவுக்கு அதிகமாக துணிகளை தூக்கிச் சென்று லக்கேஜ் அதிகரிப்பதை தவிர்க்கப் பாருங்கள்.
Labels:
other
No comments :
Post a Comment