ஐ.பி.எல் போட்டிக்குத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
மும்பை கிரிக்கெட் கவுன்சில் மனுவை நிராகரித்து, மகாராஷ்டிராவில் ஐ.பி.எல் போட்டி நடத்த தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
மும்பை உயர் நீதிமன்றம், ஐ.பி.எல் போட்டியை மகாராஷ்டிராவில் இருந்து மாற்றக் கோரி அளித்த தீர்ப்புக்கு எதிராக மும்பை கிரிக்கெட் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், முதலில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்த அனுமதிக்கலாம் என்ற முடிவுடன் இருந்தப் போதும், நீதிபதிகள் பானுமதி மற்றும் லலித் ஆகியோர் போட்டிகள் மாநிலத்திற்கு வெளியவே நடத்தப்படட்டும் என்றனர்.
வழக்கு விசாரனையின் ஆரம்பத்திலேயே, மாநில கிரிக்கெட் வாரியம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிங்கர்கள் சிதம்பரம் மற்றும் சிங்வி கூறியதாவது,
மும்பை மற்றும் புனே விளையாட்டு அரங்கத்தில், கிரிக்கெட் வாரியம், குடிநீரை பயன்படுத்த மாட்டார்கள் என்றும், பதிலுக்கு சுத்தகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்துவார்கள் என்றனர்.
Labels:
other
,
sports
No comments :
Post a Comment