நாம் வாழும் உலகிலேயே நமக்கு தெரியாத, விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிர்கள் நிறைய இருக்கின்றன. அப்படி இருக்கும் போது விண்வெளியில் நமக்கு தெரியாமல் எத்தனை விஷயங்கள் இருக்கும். மனிதன் விண்வெளி ஆய்வுகளை துவங்கி பல ஆண்டுகளாகி விட்ட போதும், இன்றுவரை புரியாத புதிராக பல்வேறு விஷயங்கள் விண்வெளியில் நிறைந்துள்ளது.
புதிர் நிறைந்த விண்வெளி பயணத்தில் தேடல்களுக்கான பதில்களை எதிர்பார்த்து பல்வேறு புதிய அனுபவங்களும், புதிய புதிர்களும் தான் நமக்கு கிடைத்த பதில்களாக உள்ளன. இவ்வாறு நிலவிற்கு பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்கள் அனுபவித்த வினோதம் குறித்த தொகுப்பு தான் இது.
சத்தம்
அப்போலோ திட்டத்தில் பணியாற்றிய விண்வெளி வீரர்கள் நிலவை நோக்கிய தங்களது பயணத்தின் போது மிகவும் வினோதமான சத்தங்களை கேட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்
இத்தகவலை நாசா'விடம் தெரிவிப்பது குறித்து நிலையற்ற தன்மை நிலவிய போதும், இத்தகவல் வெளியாகியிருக்கின்றது.
1969
அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன் அப்போலோ 10 விண்கலமானது சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
வினோதம்
இந்த விண்கலம் நிலவிற்கு வெகுதொலைவில் பயணித்த போது பூமியுடனான ரேடியோ தொடர்பினை முற்றிலுமாக இழந்து விட்டது.
நேரம்
பூமியுடனான ரேடியோ தொடர்பு மற்றும் பார்வையில் இருந்து மாயமான இந்த விண்கலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பூமியுடனான தொடர்பை முற்றிலுமாக இழந்திருந்தது.
தகவல்
ஆனால் இந்த திட்டத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி அமைதியாக இருந்ததாகவே உலகிற்கு (நமக்கு) தெரிவிக்கப்பட்டிருந்தது.
தசாப்தம்
நான்கு தசாப்தங்களுக்கு பின் மறைந்திருந்த பதிவுகள் வெளியாகி வியப்பான தகவல்களை வழங்கியுள்ளது.
அனுபவம்
அதன்படி அப்போலோ விண்கலத்தில் பயணித்த மூன்று வீரர்களும் நிலவின் வெகுதொலைவில் பயணிக்கும் போது வினோதமான சத்தத்தை கேட்டது வெளியான பதிவுகளில் தெரியவந்துள்ளது.
வினோதம்
வெளியான பதிவுகளில் இதன் முன் கேட்டிராத விசித்திரம் நிறைந்த சத்தம் பதிவாகியுள்ளதாக, "NASA's Unexplained Files" நாசாவின் விளக்கமில்லா தரவுகள் என்ற அறிவியில் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரையாடல்
மூன்று விண்வெளி வீரர்களின் உரையாடலில் தாங்கள் இதுவரை கேட்டிராத சத்தத்தை கேட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்களில் ஒருவர் 'இந்த சத்தம் மிகவும் விசித்திரமானது' என தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்தம்
இந்த விசித்திரமான டிரான்ஸ்மிஷன் சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் இது குறித்து தகவல் அளிப்பது குறித்து வீரர்கள் தங்களுக்குள் விவாதித்தகாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போலோ 15
அப்போலோ 10 வீரர்கள் குழு அவர்கள் கேட்கும் சத்தத்திற்கு பழக்கப்பட்டவர்கள் தான். ஒரு வேலை அங்கு ஏதேனும் சத்தம் பதிவு செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் அங்கு ஏதோ ஒன்று இருக்கின்றது என அப்போலோ 15 விண்வெளி வீரர் அல் வோர்டன் தெரிவித்துள்ளார்.
நாசா
மக்களுக்கு மிகவும் சுவார்ஸ்யமான தகவல் என நாசா நினைத்திருந்தால், நிச்சயம் இதனினை மக்களிடம் இருந்து மறைத்திருக்கும்.
2008
விண்வெளி வீரர்கள் அண்டத்தில் வினோதமான சத்தம் கேட்ட விஷயம் 2008 ஆம் ஆண்டு வரை பிரபலமாகாமலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments :
Post a Comment