தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு
வரும் 2023 வரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சொந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட அனுமதில்லை என தடை விதித்துள்ளது அந்த நாட்டு அரசு. தென் ஆப்பிரிக்காவில் கருப்பர், வெளையர் இன பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. விளையாட்டுத் துறையில் கருப்பின மக்களுக்கு போதிய வாய்ப்பளிக்க வேண்டி அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் தற்போது 9 சதவீத கருப்பின வீரர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதனை அதிகப்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. கிரிக்கெட், ரக்பி, நெட்பால், தடகள சங்கங்கள் அரசின் உத்தரவை ஏற்றுக்கொள்ளாததால் 2023 வரை உள்ளூரில் போட்டிகளை நடத்த அரசு தடை விதித்துள்ளது. மேலும் அரசின் உத்தரவை ஏற்றுக்கொண்டால் அடுத்த வருடமே இந்த தடை விலக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு உள்ளூரில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாத புதிய சிக்கல் வந்துள்ளது.
Labels:
other
,
sports
No comments :
Post a Comment