மீண்டும் ரஜினியை வம்புக்கிழுத்த பவர் ஸ்டார்

Share this :
No comments

சூப்பர் ஸ்டாருக்குப் போட்டியாக பவர் ஸ்டார் என்று அடைமொழி வைத்து தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் சீனிவாசன்.

காமெடி என்றால் மீட்டர் என்ன விலை என்று கேட்கும் இவரை அவ்வப்போது படங்களில் நடிக்கவும் வைக்கிறார்கள். முகம் தெரியாத படங்களின் இசை வெளியீட்டுவிழா, ட்ரெய்லர் வெளியீட்டு விழாக்களில் சீனிவாசன்தான் சீஃப் கெஸ்ட்.

நேற்று நடந்த 'வாங்க வாங்க' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கும் சீனிவாசன் அழைக்கப்பட்டிருந்தார்.

மேடையில் வழக்கம்போல ரஜினியை வம்புக்கிழுத்தார்.

சினிமாவில் எனக்கு ஒரே போட்டி ரஜினிதான். அவர் கஷ்டப்பட்டுதான் இப்போது இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். நானும் கஷ்டப்பட்டுதான் சினிமாவில் எனக்கென்று ஒரு இடத்தையும், ரசிகர்களையும் அடைந்திருக்கிறேன். கஷ்டப்பட்டால் எதுவும் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. ரஜினியின் இடத்தைப் பிடிப்பதே என்னுடைய விருப்பம் என்று சகட்டுமேனிக்கு போட்டுத் தாக்கினார்.

ரஜினிதான் என்னுடைய ஒரே போட்டி என்று சீனிவாசன் எந்த அர்த்தத்தில் சொல்கிறார்? யாராவது இந்த ஏரியாவில் ரிசர்ச் செய்தால் டபுள் டாக்டரேட் வாங்கலாம்.

No comments :

Post a Comment