திமுக வேட்பாளர் தோல்வி - தாங்கிக்கொள்ள முடியாத மகன் மரணம்

Share this :
No comments


ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வனின் தோல்வியைக் கண்டு அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திமுக சார்பில் ஏற்காடு தொகுதியில், போட்டியிட்டு தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். நடைபெற்று முடிந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதை அறிந்த, தமிழ்ச்செல்வனின் மகன் வேல்முருகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, பரிதாபமாக உயிரிழ்ந்தார். இந்த சம்பவம் ஏற்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்து போன வேல்முருகன் (19) சேலம் வி.எஸ்.ஏ. கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

No comments :

Post a Comment