விஸ்வரூபம் எடுக்கும் கமல் ரசிகர்கள் - அலறும் அரசியல் கட்சிகள்

Share this :
No comments


நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில், நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் ரகசிய கூட்டம் போட்டு, திடீர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள மே 16 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம், நடிகர் கமல்ஹாசன், சபாஷ் நாயுடு என்ற புதிய படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். இதனால் அவர் வாக்குப்பதிவு செய்யமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது குறித்து, நடிகர் கமல்ஹான் கூறுகையில், வாக்குபதிவு செய்ய வந்தாலும் வருவேன் இல்லாட்டி வராமலும் போகலாம் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டு முன்பு நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் வெளியானது. ஆனால், அந்தப்படத்தை வெளியிடமுடியாமல் நடிகர் கமல்ஹாசன் இரத்தக் கண்ணீர் வடித்தார்.

மேலும், இந்த நாட்டில் ஒரு நடிகராக இருக்கவே வெட்கப்படுகிறேன். இந்த நாட்டை விட்டே வெளியே செல்கிறேன் என உணர்ச்சி பொங்க கூறினார். பின்பு பல்வேறு சூழ்நிலை காரணமாக அந்தப்படம் வெளியானது. அவரும் அமைதியானார்.

இந்த நிலையில், இந்தப்படத்தில் பட்ட காயங்களை மறக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது என கொதித்த கமல் ரசிகர்கள், தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று சில முடிவுகளை கொங்கு மண்டலத்தில் ரகசிய கூட்டம் போட்டு சில முடிவுகளை எடுத்துள்ளார்களாம். அதை தங்களது செல்போன் முலம் பக்கத்து மாவட்டத்தில் உள்ள தங்களது மன்ற நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறி, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றார்களாம்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், இதுஎன்னடா வம்பாப்போச்சு, இவர்களை எப்படி சரிகட்டுவது என தெரியாமல் ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துபோய் உள்ளார்களாம்.

No comments :

Post a Comment