ரஜினிகாந்தை கடத்த முயற்சி? பிரபல இயக்குனர் அதிர்ச்சி தகவல்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழ் சினிமாவை தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவரை கடத்தி வைத்து மிரட்ட 'வீரப்பன்' திட்டம் தீட்டி அதற்காக ரகசியமாக வேலை செய்து வந்ததாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது தெரிவித்துள்ளார்.பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக்கி வரும் ராம் கோபால், இது பற்றி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். படத்திற்காக அவர் வீரப்பனுடன் நெருக்கமாக இருந்தவர்கள், மற்றும் அவர் கேங்கில் இருந்தவர்கள் பலருடன் பேசியபோது இந்த தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment