திருவாரூர் தொகுதியில் கருணாநிதியை தோற்கடிக்க பயங்கர சதி?
திமுக தலைவர் கருணாநிதியை திருவாரூர் தொகுதியில் தோல்வியடைய செய்ய பயங்கர சதி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாபநாசத்தின் பூண்டி என்ற பகுதியில் ஒரு லோடு ஆட்டோ சென்றுள்ளது. அந்த ஆட்டோவை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மடக்கி திடீர் சோதனை செய்தனர். அப்போது, அதில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி சுமார் 500 மாதிரி தேர்தல் இயந்திரங்கள் வைத்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த இயந்திரங்கள் மற்றும் அதனைக் கொண்டு வந்த ஆட்டோவை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை ஏற்றி வந்த லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அந்த மாதிரி வாக்குப் பதிவு இயந்திரத்தை சோதனை செய்த போது, அதில், திருவாரூர் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் பெயரும், இரட்டை இலை சின்னமும் இடம் பெற்றிருந்தது தெரிய வந்தது.
இந்த தகவல் அறிந்த கருணாநிதி மற்றும் திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திமுக தரப்பில் கேட்ட போது, மாதிரி இயந்திரங்கள் என கூறி, பிரச்சனையை திசைதிருப்ப அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். திமுக தலைவர் கருணாநிதியை தோல்வியடைச் செய்ய சதி செய்துள்ளனர். இதனால் தான் திருவாரூர் அதிமுக வேட்பளர் பெயரும், சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம் என அதிர்ச்சி விலகாமல் தெரிவித்தனர்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment