ஆறாவது முறையாக ஐக்கியமாகும் ஜோடி

Share this :
No comments


சோனாக்ஷி சின்கா நடிக்க வந்து சில வருடங்களே ஆகின்றன. 25 - ஐ தொடவில்லை அவரது படங்களின் எண்ணிக்கை.

அதில் ஐந்து படங்கள் ஒரே நடிகருடன் நடித்தது என்பதை நம்ப முடிகிறதா?

ரவுடி ரத்தோர், ஹாலிடே, பாஸ், ஜோக்கர், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை டோபாரா என ஐந்து படங்களில் சோனாக்ஷியும், அக்ஷய் குமாரும் இணைந்து நடித்துள்ளனர். ஆறாவது முறையாக இந்த ஜோடி மீண்டும் இணைகிறது.

முழுக்க காதல் கதையான இதனை விபுல் அம்ருத்லால் ஷா இயக்குகிறார். அக்ஷய், சோனாக்ஷியுடன் கத்ரினா, ரிஷி கபூர், உபேன் படேல் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்துக்கு, நமஸ்தே லண்டன் என பெயர் வைத்துள்ளனர்.

ஐம்பது பிளஸ்ஸில் கிழடுதட்டிப்போன அக்ஷயை வைத்து காதல் படமா? கேட்கிறப்பவே கண்ணை கட்டுதே.

No comments :

Post a Comment