வீடுகளில் தானாக கொட்டுது பண மழை

Share this :
No comments


தங்களது வீடுகளில், தூங்கி எழுந்த பொது மக்கள் தங்களது வீடுகளில் ஆயிரம் ரூபாய் தாள் கொட்டிக்கிடந்தது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், திமுக சார்பில் பழனியப்பனும் போட்டியிகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை அளவில், விராலிமலை தொகுதியில் பல கிராமங்களில் உள்ள வீடுகளில் ஆயிரம் ரூபாய் கிடந்தது. இதைக் கண்ட பொது மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக என கட்சி பாகுபாடு இன்றி அனைவரது வீடுகளிலும் பண மழை கொட்டியுள்ளதாம்.

இதை வினியோகித்த நபர் யார் என்று தெரியவில்லையாம். இதனால், இன்றும் வீட்டில் பணம் கொட்டுமா என பொது மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

No comments :

Post a Comment