மெல்ல மெல்ல உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க செய்யும் உணவுகள் மற்றும் பானங்கள்!

Share this :
No comments

நாம் ரசித்து ருசித்து குடிக்கும் பானங்கள், இடைவேளையில் இடைவிடாமல் நொறுக்கும் சிறுதீனிகள் மற்றும் ஆரோக்கியம் என நினைத்து நாம் நமது குழந்தைகளுக்கு அளித்து வரும் உணவுகள் பலவும் நமது உயிரை மெல்ல, மெல்ல குடிக்கும் விஷத்தன்மை உடையவை என உங்களுக்கு தெரியுமா?

ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு கலவைகள்! ஆம், நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் மற்றும் பானங்களில் சீக்கிரம் கெடமால் இருக்க மற்றும் ருசிக்காக சேர்க்கப்படும் ரசாயன மூலப்பொருட்கள் நீரிழிவு, உடல் பருமன், இதய கோளாறுகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் நாள்ப்பட உண்டாக பெரும் காரணிகளாக திகழ்கின்றன.

ஐஸ் டீ அபாய மூலப்பொருள்: ப்ரொபைலின் கிளைகோல் எல்ஜிநெட் (E405) புத்துணர்ச்சிஅளிக்கிறது என தான் பலரும் இந்த ஐஸ் டீயை விரும்பு பருகுகின்றனர்.

ஆனால், இதில் மூலப்பொருளாக சேர்க்கப்படும் ப்ரொபைலின் கிளைகோல் எல்ஜிநெட் (E405), உணவை அடர்தியாக்கவும், கூழ்மமாக்கவும், நிலையாக இருக்கவும் பயன்படுத்தப்படும் பொருளாகும். தொடர்ந்து இதை குடித்து வருவதால், இதய கோளாறுகள், நியூரோடிக் கோளாறுகள் போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

மைக்ரோவேவ் பாப்கார்ன் அபாய மூலப்பொருள்: டயாசிடைல், பெர்ஃளுராக்டநாய்க் அமிலம் (PFOA) மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு பெரிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இந்த மைக்ரோவேவ் பாப்கார்ன்கள் இதயத்தின் நலனை வெகுவாக பாதிக்கூடியவை.

இதில் சேர்க்கப்படும் PFOA அமிலம் நச்சுத்தன்மை கொண்டதாகும். பட்டர் பாப்கார்ன் என்ற பெயரில் விற்கப்படும் இவற்றில் டயாசிடைல்கலப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது மூளையை பாதுகாக்கும் செல்களை பாதிக்கும்.

பாஸ்ட்புட் சிக்கன் நக்கெட்ஸ் அபாய மூலப்பொருள்: டைக்ளைசிரைட்ஸ் (Diglycerides), ரெட் 40 மற்றும் கர்ராஜீனன் (Carrageenan) இடைவேளை நேரங்களில் சிக்கன் நக்கெட்ஸ் உண்பது ஒருவித ஃபேஷன் ஆகிவிட்டது.

ஆனால், இதில் சேர்க்கப்படும் ரசாயன பொருளான டைக்ளைசிரைட்ஸ் (Diglycerides), ரெட் 40 மற்றும் கர்ராஜீனன் போன்றவை மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை ஆகும்.

அடைக்கப்பட்ட பழரசங்கள் அபாய மூலப்பொருள்: பிரக்டோஸ் நீங்கள் குடிக்கும் அனைத்து அடைக்கப்பட்ட பழரசங்களிலும் இயற்கையானவை என்று கூறப்படுவது கேலிக்கூத்தாக தான் இருக்கிறது.

செயற்கை சர்க்கரை மற்றும் கெடாமல் இருக்க ரசயானங்கள் கலக்கப்படும் இவை எப்படி முழுக்க இயற்கையான பழரசம் என கூறப்படலாம். உங்களுக்கு தொங்கும் தொப்பை இருப்பதற்குக் முக்கிய காரணமே இது தான். மேலும், இது நீரிழிவு அபாயம் உண்டாக முக்கிய காரணியாக இருக்கிறது.

சர்க்கரை மிட்டாய்கள் அபாய மூலப்பொருள்: செயற்கை சர்க்கரை பல வண்ணம் பூசப்பட்டு சர்க்கரை கலந்து விற்கும் மிட்டாய்களை நாம் விரும்பி உண்போம். ஆனால், இதில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரையானது குழந்தைகள் மத்தியில் மந்த தன்மை அதிகரிக்க காரணியாக இருக்கிறது.

சிரல்ஸ் (Cereals) அபாய மூலப்பொருள்: பியூடெலேட்டட் ஹைட்ராக்ஸிடோலின் (பிஹெச்டி), புடிலேடெட் ஹைட்ராக்ஸானைசோல் (பிஹெச்ஏ), சுத்திகரிக்கப்பட்ட கார்பஸ் மற்றும் செயற்கை. அவசர வேலையில் காலை உணவில் நம்மில் பலர் இப்போது சேர்த்துக் கொள்ளும் உணவாக இது அதிகரித்து வருகிறது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் இதை ஊட்டி வருகிறோம். ஆனால், இதில் கலக்கப்படும் BHA மற்றும் BHT போன்றவை புற்றுநோய் உண்டாக்கக் கூடியது ஆகும்.

டயட் கோலா அபாய மூலப்பொருள்: காராமல் கலரிங், பிராமினேட்டட் தாவர எண்ணெய் (BVO), பிபிஏ (BPA), அஸ்பார்டேம். சர்க்கரை குறைவான கோலா என்று விற்கப்படும் இந்த பானத்தில் சேர்க்கப்படும் BPA உடல் பருமனை அதிகரிக்கக் கூடியது. மற்றும் BVO ராக்கெட் எரிப்பொருளாக பயன்படுத்தப்படும் பொருள். இவை ஆண்மை குறைபாடு மற்றும் தைராய்டு பிரச்சனை உண்டாக காரணியாக இருக்கின்றன.

பால் க்ரீம் அபாய மூலப்பொருள்: டைட்டானியம் டை ஆக்சைடு, டிரான்ஸ் கொழுப்பு, செயற்கை சர்க்கரை கடைகளில் நீங்கள் வாங்கி பயன்படுத்தும் பால் கிரீம்களில் சேர்க்கப்படும் டைட்டானியம் டை ஆக்சைடு, டிரான்ஸ் கொழுப்பு போன்றவை குழந்தைகளின் ஞாபக சக்திய குறைக்கவல்லது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி அபாய மூலப்பொருள்: நைட்ரேட் பெரிய மால்களில், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் கண்ணாடி பெட்டிக்குள் பல நாட்கள் பதப்படுத்தப்படுத்தி விற்கப்படும் இறைசிக்ளில் நைட்ரேட் கலப்பு இருக்கிறது.

இது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுத்தும் அபாயம் கொண்டதாகும். மேலும், இது இதய நலனையும் சீர்குலைக்கிறது.

சைனீஸ் உணவுகள் அபாய மூலப்பொருள்: மோனோசோடியம் க்ளுடாமேட் சைனீஸ் உணவுகளில் அதிகம் சுவையாக இருப்பதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் மோனோசோடியம் க்ளுடாமேட் தான். சூப் மற்றும் அசைவ உணவுகளில் இதை சேர்க்கின்றனர். ஆராய்ச்சியில் இந்த கெமிக்கல் பசியின்மையை அதிகரிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

ஐஸ்க்ரீம் அபாய மூலப்பொருள்: சோயாபீன் ஆயில், டைட்டானியம் டை ஆக்ஸைடு, செயற்கை வண்ண கலவை வருடம் முழுக்க நாம் விரும்பி உண்ணும் பொருள் ஐஸ்க்ரீம். ஆனால், இதில் கலக்கப்படும் சோயாபீன் ஆயில், டைட்டானியம் டை ஆக்ஸைடு, செயற்கை வண்ண கலவை மூலப்பொருட்கள் உடல்பருமனை அதிகரிக்க செய்கிறது.

ஓரியோ அபாய மூலப்பொருட்கள்: பனை எண்ணெய், பதப்படுத்தப்பட்ட கொக்கோ, உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப். ஓரியோவில் சேர்க்கப்படும் பனை எண்ணெய் அதிக கொழுப்பை உடலில் சேர்க்கக் கூடியது. மேலும், இது கோகோயின் மற்றும் மார்பினை விட அதிக அடிமைத்தன்மை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.


No comments :

Post a Comment