தமிழகத்தில் கன மழை நீடிக்கும்:வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Share this :
No comments


சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

சென்னைக்கு அருகே 240 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,

" தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது சென்னைக்கு அருகே 240 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மையம் கொண்டுள்ளது. இதனால் வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யும். அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இதனால் மீனவர்கள் 48 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம். தரைக்காற்று வேகமாக வீசும். அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 14 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது" என்று தெரிவித்தார்.

No comments :

Post a Comment