இதயத்தை பலப்படுத்தும் திராட்சை

Share this :
No comments

திராட்சையை தினமும் உண்ண வேண்டும். அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு ஏற்றது.

திராட்சையில் பல வகை உண்டு நமக்கு அதிகம் பரிச்சயமானது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு ஏற்றது.

திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது. இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. பச்சை திராட்சை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. எண்ணற்ற மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

பசி இல்லாமல் அவதிப்படுபவர்கள் அடிக்கடி பச்சை திராட்சையை உண்டுவர பசியை தூண்டும். ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி பச்சைத் திராட்சைக்கு உண்டு.

உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். 

இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். இது குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

எந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்களுக்கு திராட்சை அருமருந்தாக உள்ளது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வர நடுக்கம் குறையும். தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மனோ தைரியம் ஏற்படும்.

உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் பச்சைத் திராட்சைப் பழம் ஏற்றது. 

சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை பச்சைத் திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.

தினசரி பச்சைத் திராட்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். 

வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிட கூடாது.

இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு பச்சைத் திராட்சை மருந்தாகும். காலை உணவுக்குப் பின்னர் தினசரி பச்சை திராட்சை சாப்பிட்டு வர வீக்கம் குணமடையும் இருதயம் பலப்படும். எலும்புகள், பற்கள் கெட்டிப்படும்.

No comments :

Post a Comment