துணை முதல்வர் பதவிக்கு துண்டுபோடும் நமச்சிவாயம்

Share this :
No comments


புதுச்சேரியில் துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் காய் நகர்த்தி வருகிறார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில், முதல்வர் பதவி நமச்சிவாயத்துக்கு கிடைக்கும் என முதலில் தகவல் வெளியானது. பின்பு, முதல்வர் பதவி, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வசம் சென்றது.

இதனால், நமச்சிவாயம் கடும் அதிருப்தி அடைந்து கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்தார். இதனையடுத்து, காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சின்னாரெட்டி, நமச்சிவாயம் வீட்டுக்கு சென்று அவரை சமாதானம் செய்தார்.

இந்த நிலையில், புதுச்சேரி துணை முதல்வர் பதவியை நமச்சிவாயம் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, அவர் ரகசிய முயற்சி செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. புதுவையில் இதுவரை, புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி யாருக்கும் வழங்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடதக்கது.

No comments :

Post a Comment