நோ பால் கொடுத்ததால் நடுவரின் தங்கைக்கு விஷம் கொடுத்து கொன்ற பவுலர்

Share this :
No comments

உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஜராரா, பாரிகி கிராமத்தில் நடந்த கிரிக்கெட் தொடரில் முக்கியமான கட்டத்தில் நடுவர் நோ பால் கொடுத்ததால் ஆத்திரமடைந்த பவுலர் அந்த நடுவரின் தங்கையை விஷம் வைத்து கொன்றுள்ளார்.

ஜராரா என்ற கிராமத்தில் இளைஞர்கள் அடிக்கடி கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தற்போது நடந்ததால் ஜராரா மற்றும் பாரிகி கிராமத்தின் நடுவே அதனை சுற்றியுள்ள இளைஞர்கள் கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளனர்.

கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது சந்தீப் பால் என்ற நபர் முக்கியமான கட்டத்தின் போது வீசிய பந்து நோபால் என அறிவித்தார் நடுவர் ராஜ்குமார். இதனால் பவுலருக்கும், நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நோ பால் முடிவை திரும்ப பெறாவிட்டால் உன்னுடைய குடும்பத்தில் ஒருவர் உயிரோடு இருக்க மாட்டார் என பவுலர் சந்தீப் பால் மிரட்டல் விட்டார். ஆனால் கிரிக்கெட்டில் ஆக்ரஷமாக இப்படி பேசுவது வழக்கம் தான் என அவரின் மிரட்டலை கண்டுக்காமல் விட்ட நடுவர் ராஜ்குமார் தனது நோ பால் முடிவை மாற்றவில்லை.

இதனால் கோபமடைந்த அந்த பவுலர் மறுநாளே ராஜ்குமாரின் தங்கை பூஜா மற்றும் அவரின் தோழிகள் நடந்து சென்ற போது வழி மறித்து அவர்களிடம் கூல் டிரிங்ஸ் குடிக்குமாறு கூறி ஒரு பானத்தை கொடுத்துள்ளார்.

சந்தீப் பால் ஏற்கனவே பூஜாவுக்கு தெரிந்த நபர் என்பதால் அவரும், தோழிகளும் அந்த கூல் டிரிங்ஸை குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களிலேயே பூஜாவும் அவரின் தோழிகள் மயங்கி விழுந்தனர். இதில் பூஜா உயிரிழந்ததார். தோழிகள் மூன்று பேருக்கும் அலிகார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

No comments :

Post a Comment