மனைவி அமைவதெல்லாம் அவரவர் செய்த புண்ணியம் என்பார்கள். ஆனால், மனைவியே ஓர் வரம் என்பது மிக சிலருக்கு மட்டுமே தெரியும். மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகிறார்கள். சிலரின் மனைவியை பார்க்கும் போது நமக்கே பொறாமையாக இருக்கும்.

ஏறத்தாழ நடிகை சுவலட்சுமி மாதிரி முகத்திலேயே அமைதி, பொறுமை, தெய்வ கடாட்சம் தெரியும். அட, இப்படி ஒரு மனைவி நமக்கும் கிடைப்பார்களா என ஏங்குவார்கள். இப்படிப்பட்ட அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் ஏழு விஷயங்கள் பற்றி இனி காணலாம்...

செயல் #1 பொறுமை! பெரும்பாலானோரிடம் இல்லாத ஒன்று இந்த பொறுமை தான். ஆண்களிடம் இதை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். நாய் குணம் மாறாது என்பது போல, ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது. 

ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்கும் சிறந்த குணம் பொறுமை!

செயல் #2 எல்லையற்ற காதல்! சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். புரியவில்லையா? அவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள்.

செயல் #3 நேர்மை, விசுவாசம்! மனதளவில் கூட ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. உறவு சார்ந்து மட்டுமில்லாது. கணவனுக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டார்கள். தான் செய்யும் எந்த ஓர் செயலும் கணவனை பாதித்துவிடக் கூடாது என மிக கவனமாக இருக்கிறார்கள்.

செயல் #4 மன்னிப்பு! அன்பார்ந்த மனைவி, கணவன் தவறு செய்தால் திட்டும் முன்னர், மன்னிக்கவும், அந்த தவறினால் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள் பற்றி எடுத்துக் கூறி மாற்ற முனைவார்கள்.

செயல் #5 தன்னலம் அற்ற சேவை! தன்னலமற்று, குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்தும் மனைவி. எந்த ஒரு செயல்பாட்டிலும், குடும்பம், கணவன், குழந்தைகளுக்கு என்ன நல்லது என பார்த்து, பார்த்து செய்வார்கள்.

செயல் #6 சமநிலை! அறிவு ரீதியாக, உணர்ச்சி ரீதியாக சமநிலையில் செயல்பட கூடிய பெண்கள். இன்பம், துன்பம் இரண்டையும் ஒரே பார்வையில் கண்டு, வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் பெண்கள் இவர்கள். மன அளவில் கணவனுக்கு பெரியளவில் உறுதுணையாக இருப்பார்கள்.

செயல் #7 சுதந்திரம்! தன் கணவனின் நிலையை கண்டறிந்து, எது வேண்டியது, எது வேண்டாதது என புரிந்து செயல்படக் கூடியவர்கள். 

தங்கள் வாழ்க்கையின் சுதந்திரத்தை கெடாமால் பார்த்துக் கொள்ளும் வீட்டு சாமி என கூறலாம். தன் சுதந்திரம் என்ன என்று அறிந்த பெண்களால் மட்டுமே இதை சரியாக செய்ய முடியும்.







அன்பார்ந்த மனைவிகள் கணவனுக்காக ஆத்மார்த்தமாக செய்யும் ஏழு விஷயங்கள்!


தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன.

இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர். நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் அவர்கள் பேசவோ, அமரவோ மாட்டர். இந்த பாதிப்பை, 'மூளை செயல்திறன் குறைபாடு' என்று அழைக்கிறோம்.

ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடும் சீராக இருக்காது என்பதால், இவர்களை கவனமாகக் கையாள வேண்டும்.

பார்வைக் குறைபாடு, காதுகேளாறு போன்ற பிரச்சனைகள் இவர்களிடையே காணப்படும். தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன. மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு கூட, மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் பிறப்பு எண்ணிக்கை குறையவில்லை.

மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர், பிறப்பிலேயே மூச்சுத் திணறலால் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக, மருத்துவக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன. அம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு.

இந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால், குணப்படுத்த முடியாது. எனினும், வருமுன் காக்கலாம். குழந்தையாக இருக்கும்போதே, எம்.எம்.ஆர்., ஊசி போடுவது அல்லது தனியாக ருபெல்லா நோய் எதிர்ப்பு ஊசி போடுவதோ மேற்கொள்ளலாம்.

தாய்க்கும், சேய்க்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் போகும்போது, குழந்தையின் ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்து, மஞ்சள் காமாலை உருவாகும்.

இதைக் கண்டறியாமல், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், மூளை பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு விடும். பிறக்கும்போது சாதாரண நிலையில் உள்ள குழந்தை, பின் மூளையில் ரத்தக்கசிவோ, தொற்றோ, மூளையின் மேற்புறத்தில் தொற்றோ ஏற்பட்டால், மூளை செயல்திறன் குறைபாடு உருவாகும்.

மூளை செயல்திறன் குறைபாட்டின் பிரதான தாக்குதலுக்கு உள்ளாவது, மத்திய நரம்பு மண்டலம் தான். மூளை கொடுக்கும் உத்தரவுகளை, தசைகள் செயல்படுத்தாது. தசைகள் தானாகவே விரைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது இயக்கமே இல்லாமல் கிடக்கும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் தன்மை கொண்டதல்ல.

இந்தத் தன்மையின் காரணமாக, குழந்தை வளரும் போது, நோயும் வளரும் என்ற நிலை ஏற்படாது. தசை செயல் திறன் இழப்பு போன்ற, வளரும் தன்மை கொண்ட நோய்களிலிருந்து, இதை எளிதில் வித்தியாசம் காணலாம்.

மூளை செயல்திறன் குறைபாடு, பல வகைகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காணப்படுவது, தசை இறுக்க நோய். தசைகள் இறுக்கமாக, விரைப்பாகக் காணப்படும். இதனால் கால், கைகளை வளைப்பது கடினம். உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம் கால்கள் மட்டுமோ, கைகள் மட்டுமோ அல்லது கால், கை மட்டுமோ பாதிக்கப்படலாம்.

குழந்தைக்குத் துணி மாற்றும் போது, தாய் இதை கண்டுபிடிக்கலாம். விரைத்த காலை மடக்க முடியாமல் போவது தான் இதன் அறிகுறி. தவழும் போது, காலுக்கு விசை கொடுக்காமல், அதை இழுத்து இழுத்து தவழ்வதும் ஒரு அறிகுறி. நடக்க துவங்கும் போது, கால் பின்னிக் கொண்டு, சீரான நடை இல்லாமல் போகும்.

இதில் இன்னொரு வகை, தசைகளின் வளர்ச்சி குறையும். இதனால், குழந்தையின் தலை, 'லொடலொட'வென ஆடிக் கொண்டே இருக்கும். தலை சீராக நிற்க வேண்டிய மாதத்தில் நிற்காது. தலை சாய்ந்த நிலையிலேயே இருக்கும். இதனால், குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும்.

நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டிருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்தபடி இருக்கும். பேச்சும் சீராக இருக்கார் 'வழவழ' உச்சரிப்பில் இருக்கும். சொல்லின் வடிவம் மாறும். மூன்றாவது வகையில், உடலின் இயக்கம் நடுக்கத்துடன் காணப்படும்.

எனவே, எந்த வகை பாதிப்பு என்பதை, நுணுக்கமாகக் கவனித்துக் கண்டறிய வேண்டும். 3 வயது நிரம்பியதும், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இதைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும். பார்வைத்திறன், செவித்திறனையும் ஆராய வேண்டும்.

மயக்கம் ஏற்பட்டால், இ.இ.ஜி., (எலக்ட்ரோ என்செபலோகிராம்) எடுத்துப் பார்க்க வேண்டும். இதில் ஏதும் தெரியவில்லை எனில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். 

மூளை செயல்திறன் குறைபாடு கொண்டவர்கள், தாமதச் செயல்பாடு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால், அவர்கள் திறமையை மேம்படுத்த, பல்திறன் மேம்பாட்டு அணுகுமுறை தேவை.

உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றைப் பராமரிக்கவும், மூச்சுத் திணறல், நுரையீரல் பிரச்சினை, வலிப்பு ஆகியவற்றின் கடுமையைக் குறைப்பதற்காகவும், நிரந்தரமாக குழந்தை நல மருத்துவரை பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்.

தசை பலம் குறைவதால், அடிக்கடி கீழே விழும் நிலை ஏற்படும். அதைத் தவிர்க்க, உடல் இயக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) தேவை.

சுய பாதுகாப்புத் திறனை வளர்க்க, பணி மேம்பாட்டு நிபுணர் தேவை. மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள், அறிவுத் திறனில் சிறந்தவர்களாகவே உள்ளனர்.

கல்வியில் முழுமையாக ஈடுபட்டு, சிறப்புப் பணி தகுதிகள் பெற்று, கை நிறைய சம்பாதிக்கும் திறனுடன் திகழலாம். அவர்களுக்கு முக்கிய தேவை, மற்றவர்களின் உதவி, பெற்றோரின் ஊக்குவிப்பு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் அதிசயங்களால் கிடைக்கப் பெறும் உதவிகள் தான்!

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்


MDMK Chief Vaiko takes a dig at Karunanidhi and Jayalalithaa over Cash for Votes | Press Meet


Anti-Littering rules to come into effect in Railway Stations from June 1 | Thanthi TV


Vaiko requests TN Govt to not allow Shale Gas Project | Thanthi TV

நீங்கள் தவறான நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 7 அறிகுறிகள்!

நீங்கள் தவறான நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 7 அறிகுறிகள்!




ஆண் – பெண் தவறான உறவு ஏற்பட காரணம் என்ன?

ஆண் – பெண் தவறான உறவு ஏற்பட காரணம் என்ன?


இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை சொல்லி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது.

அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது.

* பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையை இளம் வயதிலிருந்தே உணர்த்த வேண்டும்.

* பிள்ளைகளுக்குச் சேமிக்கும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.

* பெரியவர்கள் குழந்தைகளுக்குப் பண்டிகை காலங்களில் தரும் பணத்தை உண்டியலில் அவர்கள் கையாலேயே போட்டு வரச் செய்ய வேண்டும், பணம் சேர்ந்தவுடன் அவர்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருளை வாங்கித் தரலாம்.

அவர்களுக்குச் சேமிப்பின் அருமை தெரிவதுடன் தன் உழைப்பில் வாங்கிய பொருள் என்று மகிழ்ச்சியாக இருக்கும்.

* குழந்தை ஆசைப்படுகின்ற எல்லாப் பொருளையும் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. எது தேவையோ அதைத் தவிர மற்றவற்றைக் குழந்தையின் பிடிவாதத்திற்காக வாங்கித் தரக் கூடாது.

குழந்தைக்குச் சிறு சிறு ஏமாற்றங்களும் கிடைத்தால் தான் பிற்காலத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் பணத்தின் மதிப்பும் தெரியும்.

* செலவிற்குப் பணம் என்று தனியாகப் பிள்ளைகள் கையில் பணத்தைப் புரள விடக் கூடாது.

குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை சொல்லி கொடுங்க




10 Fattest People In The World


விஞ்ஞானம் வளரும்போதெல்லாம் அது பெண்களை ஏதாவது ஒருவகையில் பாதிக்கத்தான் செய்கிறது.

விஞ்ஞானம் வளரும்போதெல்லாம் அது பெண்களை ஏதாவது ஒருவகையில் பாதிக்கத்தான் செய்கிறது.

முன்பெல்லாம் பெண்களை அவமானப்படுத்த வேண்டும் என்றால், பொதுமக்கள் புழங்கும் கழிப்பறையில் எழுதிவைப்பார்கள். கண்ட இடங்களில் படம் வரைந்து வைப்பார்கள். இப்போது விஞ்ஞானத்தின் துணைகொண்டு பெண்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்டர்நெட் உபயோகிக்கும் பெண்கள், அதன் மூலமாக அனுபவிக்கும் புதிய அவமான நெருக்கடிகளுக்கு ‘இன்டர்நெட் மானபங்கம்’ என்று பெயர்.

பொது கழிப்பறைகளில் படம் வரைந்தவர்களும், பொது இடங்களில் பெண்களை இடித்து, உரசி கேலி கிண்டல் செய்தவர்களும் இப்போது இன்டர்நெட் வழியாக பெண்களுக்கு எதிரான ஆபாச அச்சுறுத்துதலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆபாசமும், வன்மமும் கலந்த வாசகங்களை வெளியிடுவது, செக்ஸ் ‘போஸ்ட்டுகளை’ ‘டாக்’ செய்தல், பெண்களின் போட்டோக்களுடன் அவர்களது போட்டோக்களையும் இணைத்து, விலைமாதுகளாக சித்தரித்தல்..

இப்படிப்பட்ட பல லீலாவினோதங்களை நடத்தி வருகிறார்கள். அதனால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர், ‘போடா புண்ணாக்கு’ என்று புறந்தள்ளி விடுகிறார்கள்.

விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவி ஒருவர் தனது கல்விக்காக சில காட்சிகளை படம்பிடித்துவைத்திருந்தார். அந்த வீடியோவில் இருந்து சில ‘ஸ்டில்’களை எடுத்து காதலனே அவளது அக்கவுண்டில் போஸ்ட் செய்தார்.

லைக்குகளும், ஷேரிங்குகளும் நடந்தன. கடைசியில் அந்த பெண்ணின் போட்டோவை அப்படியே எடுத்து, ‘வெளியூரில் அந்த பெண் விலைமாதுவாக இருக்கிறார்’ என்று கூறி, சொந்த ஊரை சேர்ந்த சிலர் சித்தரித்துவிட்டார்கள். அந்த பெண் அதில் இருந்து தன்னம்பிக்கையோடு போராடி வெளியே வர சில காலம் பிடித்தது.

இன்டர்நெட் மானபங்க பேர்வழிகள் தங்களுக்கான இரைகளை பலவிதங்களில் தேடிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ட்டிராக்கிங் சாப்ட்வேர் மூலம் பெண்களை மானிட்டர் செய்து, அதை அவ்வப்போது மானிட்டர் செய்து கொண்டிருப்பது சிலரது தலையாய வேலை.

‘சைபர் ரேப்’ எனப்படும் இன்டர்நெட் மானபங்கத்தில் பாதிக்கப்படும் பெண்களின் அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. 

‘ஒரு வருடம், 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 9 கோடி பேர் சைபர் ரேப்பால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று, ஐ.நா.வின் ‘சைபர் வயலன்ஸ் எகைன்ஸ்ட் உமன் அன்ட் சில்ரன்’ என்ற ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

இன்டர்நெட்டில் பெண்கள் ஆபாசமாக சித்தரிக்கப்படுவது, ஆண்களைவிட 27 மடங்கு அதிகமாக இருக்கிறதாம். 18 முதல் 24 வயது வரை உள்ள பெண்களே இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

இன்டர் நெட் பயன்படுத்துவோரில் ஐந்தில் ஒருவர் ஆபாச அதிர்ச்சி தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. பெண்களுக்கு ஆபாச தொந்தரவு தரும் மனிதர்கள், பெண்களின் பெயரில் இருக்கும் ‘யூசர் நேம்’களையே குறிவைத்து தாக்குகிறார்கள்.

இந்தியாவில் சைபர் ரேப் மூலம் பாதிக்கப்படும் பெண்களில் 18 சதவீதம் பேருக்கு, இன்டர் நெட் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வே இல்லை என்பது பரிதாபகரமான உண்மை.

தான் பாதிக்கப்படுவது தெரிந்தாலும் அதை பெற்றோரிடம் கூறி நடவடிக்கை எடுக்க தயங்குபவர்களாக 46 சதவீதம் பேர் இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர்தான் எதிர்தாக்குதல் நடத்தவும், புகார் கொடுக்கவும் முன்வருகிறார்கள்.

இணைய மானபங்கம் : அதிரவைக்கும் உண்மைகள்




பெண்களின் இந்த 6 முக்கிய அம்சங்கள் தான் ஆண்களைக் கவருகிறது என்று தெரியுமா?

பெண்களின் இந்த 6 முக்கிய அம்சங்கள் தான் ஆண்களைக் கவருகிறது என்று தெரியுமா?


கராச்சி: பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீட்டு மாடியில் இருந்து வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்த 8 வயது சிறுமி சனிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரது வீட்டு மாடியில் இருந்து வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி ஒருவர் மாடியில் இருந்து விழுந்து பலியான தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. மாடியில் இருந்து வீசப்பட்டதில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு அவர் பலியானதும் தெரிய வந்தது.

இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தாரோ அவர் வீட்டு மாடியில் விளையாடச் சென்றபோது கால் தவறி கீழே விழுந்து இறந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டும் அவரின் குடும்பத்தார் ஏன் அதை மறைத்து வேறு விதமாக கூறினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


8 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு மாடியில் இருந்து வீசி படுகொலை.. பாக்.கில் பயங்கரம்


பொதுவாக காத‌ல் ‌திருமண‌ங்க‌ள்தா‌ன் அ‌திகமாக ‌பி‌ரி‌வினை ச‌ந்‌தி‌க்‌கி‌ன்றன. இத‌ற்கு அடி‌ப்படை‌க் காரண‌‌த்‌தி‌ல் அவசர‌க் க‌ல்யாண‌ம் முத‌லி‌ல் ‌நி‌‌ற்‌கிறது.

காதலை‌ச் சொ‌ல்‌லி, ஒருவரை ஒருவ‌ர் பு‌ரி‌ந்து கொ‌ண்டு, ‌த‌ங்களது வரு‌ங்கால‌த்தை‌ப் ப‌ற்‌றி ச‌ரியாக ‌தி‌ட்ட‌மி‌ட்டு, ‌வீ‌ட்டி‌ல் பெ‌ரியவ‌ர்க‌ளி‌ன் அனும‌தியோடு நட‌க்கு‌ம் ‌திருமண‌ங்களை ‌விட, அவசர அவசரமாக த‌ங்களது ‌திருமண‌ங்களை நட‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் காதல‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தை ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பதுதா‌ன் ‌நித‌ர்சனமான உ‌ண்மை.

காதல‌ர்க‌ள் த‌ங்களது காதலை‌ச் சொ‌ல்ல வே‌ண்டுமானா‌ல் அவசர‌ம் கா‌ட்டலா‌ம். அ‌தி‌ல் தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ள்ள அவசர‌ப்படவே‌க் கூடாது. ‌

நிதானமாக த‌ங்களது ‌நிலைகளை ஒருவரு‌க்கொருவ‌ர் பு‌ரிய வை‌‌க்க வே‌ண்டு‌ம். த‌ங்களது வரு‌ங்கால‌த்தை‌ப் ப‌ற்‌றி‌த் தெ‌ளிவாக பே‌சி ஒரு‌‌‌மி‌த்த‌க் கரு‌த்தை கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம்.

‌வீ‌ட்டி‌ல் பெ‌ரியவ‌ர்க‌‌ளிட‌ம் உ‌ங்களது காதலை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்‌லி அவ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி பெற முய‌ற்‌சி‌க்க வே‌ண்டு‌ம். ‌சில கால‌ம் பொறு‌த்‌திரு‌ந்து அவ‌ர்களது மன‌தி‌ல் இட‌ம்‌பிடி‌க்கவு‌ம், உ‌ங்களது காத‌ல் ‌மீதான உறு‌தியை கா‌ட்டவு‌ம் அவகாச‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

‌பிறகு‌ம் அவ‌ர்களது எ‌தி‌ர்‌ப்பு அ‌திக‌ரி‌த்தா‌ல், அ‌ப்போது ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேறுவதோ, சுயமாக ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வதோ தவ‌றி‌ல்லை.

ஆனா‌ல், ‌வீ‌‌ட்டி‌ல் ‌ஏதாவது ஒரு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் பொழுது அ‌தி‌லிரு‌ந்து த‌ப்‌பி‌ப்பத‌ற்காக ச‌ரியான ‌தி‌ட்ட‌மிட‌ல் இ‌ல்லாம‌ல் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு ஓடி‌ப்போ‌ய் ‌திருமண‌ம் முடி‌த்து‌க் கொ‌ள்வது தவறான முடிவாகு‌ம்.

இதனா‌ல் காதல‌ர்க‌ள் இருவருமே வேலை வா‌ய்‌ப்பு, க‌ல்‌வி போ‌ன்றவ‌ற்றை ‌தி‌ட்‌ட‌மி‌ட்டபடி அடைய முடியாம‌ல் ‌கிடை‌த்ததை‌க் கொ‌ண்டு வாழ வே‌ண்டிய சூழலு‌க்கு‌த் த‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

ஓரள‌வி‌ற்கு வச‌தியான குடு‌ம்ப‌த்‌தி‌ல் இரு‌ந்து வ‌ந்த ஆணோ, பெ‌ண்ணோ, ‌திடீரென த‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் கஷ‌்ட‌ங்களை ‌திருமணமான பு‌தி‌தி‌ல் வே‌ண்டுமானா‌ல் தா‌க்கு‌ப்‌பிடி‌க்க‌ப் பா‌ர்‌ப்பா‌ர்க‌ள்.

ஆனா‌ல் அதையே வா‌ழ்நா‌ள் முழுவது‌ம் ச‌கி‌த்து‌க் கொ‌ள்ள முடியாதவ‌ர்களாக ஒரு கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்தையே வெறு‌ப்பா‌ர்க‌ள். அடு‌த்ததாக தா‌ம் ‌விரு‌ம்‌பி ஏ‌ற்று‌க் கொ‌ண்ட தனது வா‌ழ்‌க்கை‌த் து‌ணை‌யி‌ன் ‌‌மீது த‌ங்களது கோப‌ம் ‌திரு‌ம்பு‌ம்.

மேலு‌ம், அவசர‌க் க‌ல்யாணத‌்‌தினா‌ல் இருவருமே த‌ங்களது பெ‌ற்றோ‌ர், உற‌வின‌ர்க‌‌ளி‌ன் ஆதர‌வினை இழ‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனா‌ல் மன‌விய‌ல் அடி‌ப்படை‌யிலு‌ம் த‌ங்களு‌க்கு யாரு‌மி‌ல்லை எ‌ன்ற பய‌த்தை ஏ‌ற்படு‌த்த‌ி‌யிரு‌க்கு‌ம்.

ஒருவேளை இருவரு‌ம் ந‌ல்ல முறை‌யி‌ல் காத‌லி‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் சுக து‌க்க‌ங்களை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வா‌ய்‌ப்பு ஏ‌ற்படு‌ம்.

ஆனா‌ல் ஒருவ‌ர், வெறு‌ம் காம‌த்‌தி‌ற்காகவோ, பண‌ம் அ‌ல்லது வேறு ஒரு தேவை‌க்காக ஏமா‌ற்‌றி ‌திருமண‌ம் செ‌‌ய்து கொ‌ள்ளு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல், அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் அ‌ல்லது ஆ‌ணி‌ன் ‌நிலை எ‌ன்னவாக இரு‌க்கு‌ம். 

ந‌ம்‌பி வ‌ந்த இடமு‌ம் மோச‌ம் போ‌ய், பெ‌ற்றவ‌ர்களு‌ம் ந‌ம்மை ‌மீ‌ண்டு‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளாத ‌நிலை‌யி‌ல் அனாதை ‌நிலை‌க்கு அ‌ல்லவா த‌ள்ள‌ப்படுவா‌ர்க‌ள்.

அவசர‌ ‌திருமண‌த்தால் உண்டாகும் அவ‌ஸ்தை


ருத்ராட்ச மாலை அணிபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

நீராடல், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம்.

பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.

துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.

இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம் - உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும்.

இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும்.

காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.

ருத்ராட்ச மாலை எந்த தருணத்தில் கழுத்தில் இருக்க கூடாது?


மலேசியாவை சேர்ந்த 15 வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்த கருவை ஆபரேஷன் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.

கோலாலம்பூர்:

மலேசியா நாட்டில் உள்ள கேடா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஜூல் ஷஹ்ரில் சைதீன் (15) இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது.

இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்துப்போன கரு இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது, இவரது தாய் கர்ப்பம் தரித்தபோது இரட்டை கருக்கள் உருவாகியுள்ளன,

அதில், ஒரு கருவானது ஜூலின் தொப்புள் கொடி வழியாக அவரது வயிற்றுக்குள் சென்று தங்கிவிட்டுள்ளது.

இதைஅறியாத அவரது தாயார், தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என நினைத்து ஜூலுவை வளர்த்து வந்துள்ளார், இந்நிலையில், ஜூலு வயிற்றுக்கள் இருந்த கருவின் கை, கால்கள், தலைமுடி மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்பு போன்றவை வளர்ச்சியடைந்துள்ளது.

ஆனால், முகத்தில் உள்ள கண், மூக்கு, வாய் போன்றவை மட்டும் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை.

இரட்டை கருக்கள் உருவாகும் பட்சத்தில், அதில் ஒரு கரு மற்றொரு கருவின் தொப்புள் கொடியின் வழியாக சென்று அங்கு வளர்ச்சியடையும், ஆனால், எப்போது தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவருகிறதோ அப்போதே, இந்த கருவானது உயிரிழந்துவிடும், இக்கரு வாழ்வதற்கான எவ்வித சாத்தியக்கூறும் இல்லை. இது 5 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அரிதான நிகழ்வாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, ஜூலுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் அவனது வயிற்றில் 15 ஆண்டுகளாக தங்கியிருந்த இருந்த கருவானது, வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

மலேசியாவில் வயிற்றுக்குள் சகோதரனை சுமந்தபடி 15 ஆண்டுகளாக வாழ்ந்த சிறுவன்


பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன.

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன.

இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. பிறப்புறுப்புப்புண் இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும்.

இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறுசிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.

பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் அசாதாரணப்போக்கும் ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும்.

பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறை படியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும். கவட்டியில் நெறிகட்டுதல் ஆண், பெண் இரு பாலருக்கும் கவட்டியில் அதாவது இடு‌ப்பு‌ம் காலு‌ம் இணையு‌ம் பகு‌தி‌யில் நெறி கட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.

ஆ‌ண்களு‌க்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால்வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம்.

உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும். இ‌தி‌ல் ஒரு சில அ‌றிகு‌றிக‌ள் வெறு‌ம் தொ‌ற்றுக் ‌கிரு‌மிகளாலு‌ம் ஏ‌ற்படலா‌ம். ஆனா‌ல் எதுவாக இரு‌ந்தாலு‌ம் உடனடியாக மரு‌த்துவ ப‌ரிசோதனை செ‌ய்து ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வது ‌மிகவும் மு‌க்‌‌கிய‌ம்.

பாதுகாப்பற்ற‍ உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்


குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும் பொழுதிலிருந்தே அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

அதிக அளவில் கட்டணம் கொடுத்து மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தாலும் சில குழந்தைகள் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாகிவிடும்.

எனவே குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும் பொழுதிலிருந்தே அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும். நண்பர்களை கூட வாடி,போடி, என்று பேசுவதை தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது நலம்.

பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள். இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,"நாங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்" என்று தெளிவாக சொல்ல வேண்டும்.

Waiting their turn என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில் இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். இது தவறு என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும். கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.இதனால் விருந்தினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை. பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும். அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய் விடுவார்கள். இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிஜத்தில் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.

அதுதான் Good sportsmanship. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது "You're welcome" சொல்ல மறக்காதீங்க. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப் பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை சொல்லத் துவங்கக் கூடாது.

வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால் என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு பிரத்யோக பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் இருக்கின்றன. அவை அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை பிள்ளைகள் உணரவேண்டும்.

அதேபோல் வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவைகளை கற்றுக்கொண்டால் உங்கள் குழந்தைகள் பிறர் பாரட்டத்தக்க வகையில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்.

மற்றவர்களிடம் பழகும் முறையை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்க




Hawaii’s Kilauea Volcano Erupts Sending Lava Flows from One of its Cones

Hawaii’s Kilauea Volcano Erupts Sending Lava Flows from One of its Cones


சென்னை: தமிழகத்தில் அதிமுக அரசு அறிவித்துள்ள 100 யூனிட் மின்சாரம் வரை இலவசம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது 100 யூனிட்டுக்கு மேல் போனால் எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும் என்பதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமானக் கழகம் விளக்கி கட்டண கணக்கீட்டுப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை இலவசமாக அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது. ஆட்சி அமைந்ததும் அந்த வாக்குறுதியை தனது முதல் உத்தரவிலேயே நிறைவேற்றினால் முதல்வர் ஜெயலலிதா.

இந்த நிலையில் தற்போது 100 யூனிட்டுக்கு மேல் போனால் எவ்வளவு கட்ட வேண்டும் என்பது குறித்து டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கியுள்ளது.

அதன்படி 100 யூனிட்டுக்கு மேல் போனால் அதில் 100 யூனிட்டைக் கழித்து விட்டு மீதம் வரும் யூனிட்டுகளை மட்டும் கணக்கிட்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு 160 யூனிட் செலவழித்துள்ளதாக இருந்தால் அதில் 100ஐக் கழித்து விட்டு 60 யூனிட் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதற்கான கட்டணம் ரூ. 110 ஆகும்.


100 யூனிட் வரை ஓகே... அதுக்கு மேல் போனால் நீங்க எவ்வளவு கட்டணும் தெரியுமா?


கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், பிரச்சினைகள் தானே ஒதுங்கிப்போய்விடும்.

தற்போது எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். எல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது. பரஸ்பரம் புரிந்து கொள்வதில் இருக்கிறது பாதி வாழ்க்கை, விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது மீதி வாழ்க்கை. 

எப்போது கணவன், மனைவியின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும், எப்போது யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது புரியாமல்தான் அத்தனை பிரச்சினைகளும்.

இதற்கு ஒரே தீர்வு மனம் விட்டுப் பேசிக்கொள்வதுதான். ஆமாம், கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், பிரச்சினைகள் தானே ஒதுங்கிப்போய்விடும். 

வாருங்கள் தம்பதியரின் புரிந்துணர்வை அதிகரிக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்…

அலுவலக பிரச்சினைகளை கணவர் மனைவியிடம் கூறலாம். உடல்–மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் கூறலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ‘நமக்காக ஒருவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையை வளப்படுத்தும்.

ஏதோ காரணத்தால் பிரச்சினை பெரிதாகும்போது யாராவது ஒருவர் மவுனம் காத்தால் தீர்வு விரைவில் எட்டப்படும். ஒருவர் மவுனத்தைப் புரிந்து கொண்டு மற்றவர் பேசுவதை குறைக்கலாம். 

பிறகு அந்த மவுனமே இருவரும் சிந்திக்கும் நிலையைத் தூண்டும். அதுவே தன்பக்க தவறை உணரும் வாய்ப்பாக மாறும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.

கர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும்.

இருவருக்குமே தன்மான உணர்வுகள் உண்டு, இணைந்து வாழ்வதே இல்லறம். அதில் இருவருக்கும் சமபங்கு, உரிமை இருக்கிறது. 

‘அவர்/அவள் இறங்கி வரட்டும்’, ‘ஆண் இல்லாமல் அவளால் என்ன செய்ய முடியும்?’ என்பது போன்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால், அது பிரிவினையில்தான் கொண்டுபோய்விடும். பிறகு பிரிவுதான் இருவருக்கும் பாடம் கற்பிக்கும்.

தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் உங்களுக்குள் பேசி தீர்வு காணுங்கள். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி பராமரித்து பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது.

தாம்பத்தியம்தான் தம்பதியரின் அடிப்படை உறவு. தாம்பத்தியம் ஆரோக்கியமாக இருந்தால், பெரிய பிரச்சினைகளும் தானாக ஓடி மறைந்துவிடும். கோபம், பொறாமை, வஞ்சனை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்தியத்திற்கு உண்டு. 

கணவன், மனைவி இருவருமே பாலியல் தேவைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும்.

தம்பதியர் இடையே அடிக்கடி சண்டைகள் வரக்காரணம்