100 யூனிட் வரை ஓகே... அதுக்கு மேல் போனால் நீங்க எவ்வளவு கட்டணும் தெரியுமா?

Share this :
No comments

சென்னை: தமிழகத்தில் அதிமுக அரசு அறிவித்துள்ள 100 யூனிட் மின்சாரம் வரை இலவசம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது 100 யூனிட்டுக்கு மேல் போனால் எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும் என்பதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமானக் கழகம் விளக்கி கட்டண கணக்கீட்டுப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை இலவசமாக அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது. ஆட்சி அமைந்ததும் அந்த வாக்குறுதியை தனது முதல் உத்தரவிலேயே நிறைவேற்றினால் முதல்வர் ஜெயலலிதா.

இந்த நிலையில் தற்போது 100 யூனிட்டுக்கு மேல் போனால் எவ்வளவு கட்ட வேண்டும் என்பது குறித்து டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கியுள்ளது.

அதன்படி 100 யூனிட்டுக்கு மேல் போனால் அதில் 100 யூனிட்டைக் கழித்து விட்டு மீதம் வரும் யூனிட்டுகளை மட்டும் கணக்கிட்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு 160 யூனிட் செலவழித்துள்ளதாக இருந்தால் அதில் 100ஐக் கழித்து விட்டு 60 யூனிட் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதற்கான கட்டணம் ரூ. 110 ஆகும்.


No comments :

Post a Comment