கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

Share this :
No comments


கொல்கத்தாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிச்சியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் கனேஷ் டால்கீஸ் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அவர்கள் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில, இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அங்சப்படுகின்றது.

இந்நிலையில், இடிபாடுகளில் சுமார் 150 பேர் சிக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும், அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


No comments :

Post a Comment