எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனை பாழாக்கிய விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் இருக்கும், எம்.ஜி.ஆரின் பிரச்சார வேன், சரியான பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவர் தேர்தல் காலத்தில் பயன்படுத்திய பிரச்சார வேன், அவரின் மனைவி ஜானகியிடம் இருந்தது. அந்த வேனை பலர் கேட்டும் ஜானகியம்மாள் கொடுக்கவில்லை.
ஆனால், சினிமா துறையிலிருந்து அரசியலில் குதித்தபின், அந்த வேனை தனக்கு தரும்படி விஜயகாந்த் கேட்டதும் அவருக்கு அந்த வேனை கொடுத்தார் ஜானகி.
ஆரம்ப காலத்தில், அந்த வேனை கோவில் போல் கும்பிட்டார் விஜயகாந்த். விருதாச்சலம் தொகுதியில் எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிடும் போது கூட, அந்த வேனிலேயே அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசும் போதெல்லாம் அந்த வேனைப் பற்றி பெருமை பேசினார் விஜயாகாந்த்.
ஆனால், அரசியலில் வளர்ச்சியடைந்து, எதிர்கட்சி தலைவரான பிறகு, விஜயகாந்த் அந்த வேனை பயன்படுத்தவில்லை. சரியான பராமரிப்பும் இல்லாத காரணத்தினால் அந்த வேன் சிதிலமடைந்து விட்டதாக தெரிகிறது.
முதலில் அவரின் வீட்டில் நின்றிருந்த வேன், தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகலத்தில் நிற்க வைக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய அந்த வேன் பழை இரும்புக்கடையில் போடும் நிலையில் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பிரச்சார வேனை கேட்டு வாங்கிய விஜயகாந்த், அதை சரியாக பராமரிக்காமல் இப்படி சீரழித்து விட்டாரே என்று எம்ஜிஆர் ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment