வெள்ளித்திரைக்கு வரும் சேரனின் டிவிடி சினிமா
சேரன் இயக்கத்தில் உருவான படம் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. இப்படம் சேரனின் 10வது படமாகும்.
இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் சேரனே தயாரித்திருந்தார். இதில் சர்வானந்த் நாயகனாகவும், நித்யா மேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தை ‘சினிமா டூ ஹோம்’ என்ற புதிய யுக்தி மூலம் தியேட்டர்களில் வெளியிடாமல் டிவிடி மூலம் வெளியிட்டார் சேரன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தை ஏப்ரல் 14ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சேரன் கூறும்போது, ‘இப்படத்தை நிறைய பேர் பார்க்கவில்லை. படத்தை பார்த்தவர்களும் திரையரங்குகளில் பார்க்க விரும்புகிறார்கள். எனவே, இப்படத்தை ஏப்ரல் 14ம் தேதி திரையில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இப்படத்தை கண்கள் முழுவதும் கனவுகளோடு திரியும் இளைஞர் கூட்டத்திற்கு காணிக்கை ஆக்குகிறேன்’ என்றார்.
இந்தமுறையாவது படம் திரைக்கு வந்தால் சரிதான்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment