தாஜ்மகால் கலசம் காணாமல் போனதா? தொல்லியல் துறை விளக்கம்
காணாமல் போனதாக கூறப்பட்ட தாஜ்மகால் கலசம் பழுதுபார்ப்பதற்காக இறக்கப்பட்டது: தொல்லியல் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலில் தற்போது பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் தாஜ்மகாலை சுற்றியுள்ள 4 ஸ்தூபிகளில் ஒரு ஸ்தூபியின் உச்சியில் இருந்த கலசம் காணாமல் போய்யிருந்தது.
இந்த கலசம் பராமரிப்பு பணியின்போது, கீழே விழுந்து பல துண்டுகளாக உடைந்ததாக சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த தகவலை தொல்லியல் துறை மறுத்ததுடன், இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில், "தாஜ்மகாலில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட அந்த கலசத்தின் இரும்பு பட்டை துருப்பிடித்து, கலசம் வலுவிழந்து இருந்தது கண்டுபிடிப்பப்பட்டது. இதனால், அதை பழுதுபார்ப்பதற்காக கீழே இறக்கப்பட்டது" என்று தெரிவித்தனர்.
அது சரி செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் கலசம் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment