காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் அறிவிப்பு!

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் முதன் முதலில் கூட்டணி சேர்ந்த கட்சிகள் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தான். ஆனால் நீண்ட நாட்களாக தொகுதி பங்கீடுகள் இழுபறியில் நீடித்து வந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் இளாங்கோவன் அவ்வப்போது கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைமையிடம் ஆலோசனை நடத்தி வந்தார். ஒரு வழியாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அந்த 41 தொகுதிகள் என்னென்ன என்ற அந்த அறிவிப்பை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று அறிவித்தார். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இளங்கோவன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்: 1. திருத்தணி 2. அம்பத்தூர் 3. இராயபுரம் 4. மயிலாப்பூர் 5. திருப்பெரும்புதூர்(தனி) 6. மதுரவாயில் 7. ஆற்காடு 8. ஓசூர் 9. கலசப்பாக்கம் 10. செய்யாறு 11. ஆத்தூர் (தனி) 12. சங்ககிரி 13. நாமக்கல் 14. கோபிசெட்டிபாளையம் 15. உதகமண்டலம் 16. காங்கயம் 17. தாராபுரம் (தனி) 18. சூலூர் 19. கோவை (தெற்கு) 20. வேடசந்தூர் 21. கரூர் 22. திருச்சி கிழக்கு 23. முசிறி 24. ஜெயங்கொண்டம் 25. காட்டுமன்னார்கோயில் (தனி) 26. வேதாரண்யம் 27. நன்னிலம் 28. பாபநாசம் 29. பட்டுக்கோட்டை 30. அறந்தாங்கி 31. காரைக்குடி 32. மதுரை (வடக்கு) 33. திருமங்கலம் 34. சிவகாசி 35. முதுகுளத்தூர் 36. திருவைகுண்டம் 37. தென்காசி 38 நாங்குநேரி 39. குளச்சல் 40. விளவங்கோடு 41. கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்படுள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment