தேர்தல் மாதத்தை மாற்றிய காங்கிரஸ்: தொகுதிகள் பட்டியலில் குழப்படி
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியலை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் இன்று வெளியிட்டார். இந்த வேட்பாளர் பட்டியலில் தமிழக தேர்தல் தேதியில் மாதம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ஆம் தேதி நடைபெறுகிறது (16-5-2016). ஆனால் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தொகுதிகள் பட்டியலில் மே மாதத்திற்கு பதிலாக ஏப்ரல் மாதம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது 16-5-2016 என்பதற்கு பதிலாக 16-4-2016 என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment