பாகிஸ்தானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்வா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி ஆ பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையோரப் பகுதியில் ஹிந்த்குஷ் மலைப்பிரதேசத்தில் பூமியின் அடியில் சுமார் 236 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிகடர் அளவுக்கோலில் 7.1 அலகாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பத்து முதல் பதினைந்து வினாடிகள் நீடித்து. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடந்தன. இடிபாடுகளில் சிக்கி கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஐந்து பேரும், கில்கிட் - பல்ட்டிஸ்டான் மாகாணத்தில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Labels:
News
,
other
No comments :
Post a Comment