மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிர்ச்சி : ஊழியரை தாக்கி ரு.12 லட்சம் கொள்ளை

Share this :
No comments

மெட்ரோ ரயில் நிலையத்தில், டிக்கெட் கவுண்டர் அமைந்துள்ள அறையில் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ரெயில்வே ஊழியரைத் தாக்கி ரூ.12 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ரஜிந்தர் பிலேஸ் மெட்ரோ ரயில் உள்ள டிக்கெட் கவுண்ட்டருக்குள் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மர்ம நபர்கள் நுழைந்தனர். அங்கிருந்த காசாளரை கத்தி முனையில் மிரட்டி தாக்கினர். அதன்பின் அங்கிருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், அந்த ரயில்வே நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள சம்பவங்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments :

Post a Comment