நட்சத்திர வேட்பாளர்களும் அவர்களை எதிர்த்து களம் இறங்குபவர்களும்!

Share this :
No comments

வரும் மே 16 ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல வேட்பாளர்கள் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகிறார்கள். குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இங்கு அவரை எதிர்த்து திமுகவின் சிம்லா முத்துச் சோழன் களம் இறக்குகிறார். இதனால் இந்த தொகுதி அதிமுக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுகிறது. நட்சத்திர வேட்பாளர்கள்: 1. ஆர்.கே.நகரில் அதிமுகவின் ஜெயலலிதாவை எதிர்த்து திமுகவின் சிம்லா முத்துச் சோழன் போட்டியிடுகிறார். 2. திருவாரூரில் திமுகவின் கருணாநிதியை எதிர்த்து அதிமுகவின் ஏ.என்.ஆர் பன்னீர்செல்வம் களம் இறங்குகிறார். 3. கொளத்தூர் தொகுதியில் திமுகவின் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர் போட்டியிடுகிறார். 4. சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சேகர் பாபுவை எதிர்த்து அதிமுகவின் சீனிவாசன் களம் இறங்குகிறார். 5. சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் ஜெ.அன்பழகனை எதிர்த்து அதிமுகவின் நூர் ஜஹானும் போட்டியிடுகிறார். 6. பல்லாவரம் தொகுதியில் அதிமுகவின் சி.ஆர்.சரஸ்வதியை எதிர்த்து திமுகவின் இ.கருணாநிதி போட்டியிடுகிறார். 7. சைதாப்பேட்டை தொகுதியில் திமுகவின் மா.சுப்ரமணியனை எதிர்த்து அதிமுகவின் சி.பொன்னையன் போட்டியிடுகின்றார். 8. வேளச்சேரி தொகுதியில் திமுகவின் வாகை சந்திரசேகரை எதிர்த்து அதிமுகவின் எம்.சி முனுசாமி போட்டியிடுகின்றார். 9. எழும்பூர் தொகுதியில் அதிமுகவின் பரிதி இளம்வழுதியை எதிர்த்து திமுகவின் கே.எஸ் ரவிச்சந்திரன் களம் இறங்குகிறார். 10. அண்ணாநகர் தொகுதியில் அதிமுகவின் கோகுல இந்திராவை எதிர்த்து திமுகவின் மோகன் போட்டியிடுகிறார். 11. ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுகவின் வளர்மதியை எதிர்த்து திமுகவின் கு.க செல்வம் களம் இறங்குகிறார். 12. ஆலந்தூர் தொகுதியில் அதிமுகவின் பண்ரூட்டி ராமச்சந்தினை எதிர்த்து திமுகவின் தா.மோ.அன்பரசன் போட்டியிடுகின்றார். 13. திருச்செந்தூர் தொகுதியில் சமகவின் சரத்குமாரை எதிர்த்து திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் களம் இறங்குகிறார். 14. அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவின் செந்தில் பாலாஜியை எதிர்த்து திமுகவின் கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார். 15. திருவொற்றியூர் தொகுதியில் திமுகவின் கே.பி.பி. சாமியை எதிர்த்து அதிமுகவின் பால்‌ராஜ் போட்டியிடுகிறார். 16. அவினாசி தொகுதியில் அதிமுகவின் தனபாலை எதிர்த்து திமுகவின் சி.ஆனந்தன் களம் இறங்குகிறார். 17. கம்பம் தொகுதியில் அதிமுகவின் ஜக்கையனை எதிர்த்து திமுகவின் கம்பம் ராமகிருஷ்ணன் போட்டியிடுகின்றார். 18. ஆத்தூர் தொகுதியில் அதிமுகவின் நத்தம் விஸ்வநதானை எதிர்த்து திமுகவின் இ.பெரியசாமியும் களம் இறங்குகிறார். 19. போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுகவின் எஸ்.லெட்சுமணன் களம் இறங்குகிறார். 20. காட்பாடி தொகுதியில் திமுகவின் துரைமுருகனை எதிர்த்து அதிமுகவின் எஸ்.ஆர்.கே அப்பு போட்டியிடுகின்றார். 21. அருப்புக்கோட்டை தொகுதியில் திமுகவின் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை எதிர்த்து அதிமுகவின் வைகைச் செல்வன் களம் இறங்குகிறார். 22. குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுகவின் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அதிமுகவின் ராஜேந்திரன் போட்டியிடுகின்றார். 23. ராதாபுரம் தொகுதியில் திமுகவின் அப்பாவுவை எதிர்த்து அதிமுகவின் இன்பதுரை போட்டியிடுகின்றார். 24. திருச்சி மேற்குத் தொகுதியில் திமுகவின் கே.ஏன் நேருவை எதிர்த்து அதிமுகவின் ஆர்.மனோகரன் களம் இறங்குகிறார்.

No comments :

Post a Comment