அவங்க கூத்தடிக்கிற பணத்தில் நடிகர் சங்கமே கட்டலாம்
இப்படித்தான் அனைவரும் அலுத்துக் கொள்கிறார்கள். நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் அர்ப்பணிப்புக்கும், புகழுக்கும் கரும்புள்ளியாக விழுந்திருக்கிறது, அந்த நட்சத்திர விடுதி ஆட்டம். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்ட நிதி திரட்ட ஏப்ரல் 17 நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துகின்றனர். அப்போதே முணுமுணுப்பு கிளம்பியது. சங்க கட்டிடம் கட்டுறதுக்கு சொந்த பாக்கெட்டில் இருந்து பணம் போட வேண்டியதுதானே. அதற்குள் பொதுமக்களிடம் கையேந்த வேண்டுமா என்று இணையத்தில் வெகுஜனங்களே காய்ச்சி எடுத்தனர். இந்நிலையில், வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தும் விழாவை நட்சத்திர ஹோட்டலில் நடத்தினர். பாட்டும், பார்ட்டியும், கும்மாளமுமாக நடந்த இந்த விழாவுக்கே பல லட்சங்கள் செலவழிக்கப்பட்டதாம். இப்படி கூத்தடிக்கிற பணத்தில் சங்க கட்டிடத்துக்கான பணிகளை செய்யலாமே என்று வெளிப்படையாகவே தூற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். நட்சத்திர கிரிக்கெட் என்ற பெயரில் பொதுமக்களிடம் உண்டியல் குலுக்குவது என்று முடிவு செய்த பின் இப்படி நட்சத்திர ஹோட்டல்களில் கூத்தடிப்பது சரியா நடிகர்களே...?
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment