தொலைப்பேசி நிறுவனங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: டிராய் அதிரடி
இந்தியாவில் அதிகமாக வருவாய் ஈட்டிக்கொண்டிருக்கும் செல்போன் நிறுவனங்கள், அழைப்பு துண்டிக்கப்படுவதை சரி செய்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று டிராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தொலைப்பேசி நிறுவனங்கள் மீது கடுமையாக குற்றம்சாட்டினார். எல்லா தொலைப்பேசி நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து முழு லாபத்தையும் எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். பயனாளர்களிடமிருந்து, தினமும் ரூபாய் 250 கோடி வரை லாபம் ஈட்டி வரும் தொலைப்பேசி நிறுவனங்கள், அழைப்பு துண்டிக்கப்படுவதை சரி செய்வதற்கு எந்த முதலீடும் செய்வதில்லை என்று தெரிவித்த முகுல் ரோஹத்கி அழைப்பு துண்டிப்புக்கான டிராய் விதித்துள்ள அபராதம் பெரிய தொகையாக இருக்காது என்று கூறினார். இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment