மச்சான்ஸ்..அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்க : களம் இறங்கும் நமீதா

சினிமா கவர்ச்சி நடிகை நமீதா, அதிமுகவில் சேர விரும்பி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். எங்கள் அண்ணா என்ற படத்தில் அறிமுகமானவர் நமீதா. அதன்பின் ஏய், சாணக்கியா, பில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நமீதா. உடல் எடை கூடியதால், சரியான வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு சில வருடங்கள் அவர் விலகி இருந்தார். அதன்பின் தீவிர உணவு கட்டுப்பாடு மற்றும் உடல் பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைத்து தற்போது அழகாக காட்சியளிக்கிறார். மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறியுள்ள அவருக்கு, தற்போது அரசியலில் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், அதிமுகவில் இணைய முடிவெடுத்துள்ள நமீதா, ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “நான் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளேன். தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக திகழ வைத்துள்ளது. சிறந்த தலைவியாக விளங்கும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். எனவே தங்கள் தலைமையில் என்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அவரை பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment