கீர்த்தி சுரேஷுக்கு கை கொடுக்கும் மொழிப்புலமை
மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கே தமிழ் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிக்கும். முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷும் மலையாளிதான். அவருக்கு ரத்தின கம்பளமே விரித்திருக்கிறார்கள். மலையாளி என்றாலும் கீர்த்தி சுரேஷுக்கு தமிழ் அத்துப்படி. சரளமாக பேசுவார். அதனால் சைகை பாஷையில்லாமல் அவரிடம் இயக்குனர்களால் காட்சிகளை விளக்க முடியும். இது என்ன மாயம் படத்தில் முதலில் ஒப்பந்தமான கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் விஜய் ஜோடியாக ஒப்பந்தம் ஆனதற்கு இந்த மொழிப்புலமையும், ஒரு காரணம் என்கிறார்கள். தமிழ் தெரிந்தால் எந்த பலனும் இல்லை என்று இனி யாரும் கூற முடியாது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment