சரத்குமாருக்கு வேட்டு வைக்கும் ராதிகா?
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் மனைவி ராதிகா திமுகவின் ஆவின் பால் விலைக்குறைப்பு டுவிட்டை ரீடுவீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆவின் பால் விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஆனால் இதனை ரீ டுவீட் செய்திருக்கும் ராதிகாவின் கணவர் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருச்செந்தூர் தொகுதியில் களம் இறங்குகிறார். கணவர் இடம்பெற்றிருக்கும் கூட்டணிக்கு எதிரான கட்சியின் தேர்தல் வாக்குறுதியை வரவேற்று அதனை ரீடுவீட் செய்திருக்கும் ராதிகாவின் இந்த செயல் திமுகவின் ஆதரவு செயல்பாடாக பேசப்படுகிறது. இதனால் சரத்குமாருக்கு திருச்செந்தூர் தொகுதி நிலைக்குமா அல்லது வேட்டு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment