இளவரசி டயனாவுடன் ‘நெருங்கிய’ தொடர்பு இருந்தது - டென்னிஸ் வீரர் தகவல்
மறைந்த இளவரசி டயானாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்று முன்னாள் செர்பியா டென்னிஸ் வீரர் ஸ்லோபோடன் ஜிவோஜினோவிச் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இளவரசி டயானாவுடன் ஸ்லோபோடன் ஜிவோஜினோவிச்
செர்பிய டென்னிஸ் வீரர் ஜிவோஜினோவிச் [52] தனது வருங்கால மனைவி ஜோரிகா டெஸ்னிகாவுடனான நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது, இளவரசி டயானாவுடன் நெருக்கமான தொடர்ப்பு இருந்தது என்று கூறியுள்ளார். ஆனால், முழுமையான தகவல் எதையும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
இது குறித்து உள்ளூர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “இது குறித்து நான் எந்த முழு விவரங்களையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில், அவர், இனிமேல் நம்முடம் இருக்கப்போவது கிடையாது.
ஸ்லோபோடன் ஜிவோஜினோவிச் தனது மனைவி ஜோரிகா டெஸ்னிகா உடன்
ஆனால், நான் சொல்லவருவது என்னவென்றால், அவரைப்போல ஒரு நபர் நம்முடைய ஆட்டத்தை காண வந்து நமக்கு ஆதரவை தெரிவிப்பது என்பது சிறப்பான விஷயமாகும். ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் எனக்கு ஆதரவு தெரிவித்தது என்பது, எனக்கு அதற்கு முன்னதாக ஒருபோது நடந்திராத நிகழ்ச்சி ஆகும்” என்று கூறியுள்ளார்.
அந்த உள்ளூர் பத்திரிக்கை 1980 ஆம் ஆண்டுகளின்போது ஸ்லோபோடன் ஜிவோஜினோவிச், டயானவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
ஸ்லோபோடன் ஜிவோஜினோவிச் ஆடும் விம்பிள்டென் போட்டியை காணும் டயானா
மேலும் ஸ்லோபோடன் ஜிவோஜினோவிச் கூறுகையில், “எங்களுடைய முதல் சந்திப்பின்போது, அவர் என்னிடம் ‘நான் ஒரு டென்னிஸ் வீரராக இருந்தால் வேகமாக சர்வீஸ் போடுவீர்களா?’ என்றார். அதற்கு நான் ’ஆம்’ என்றேன். மேலும் அவர் எனது ஆட்டம் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “அவர் ஒரு அற்புதமான பெண்மனி. அவருடைய எத்தகைய எளிமையான விஷயத்தைப் பற்றியும் கூட பேசுவது என்பது சுவாராஸ்யமாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment