தமிழ் சினிமாவில் நடிகர்கள் பேசிய பஞ்ச் வசனங்கள் மூலம் தேர்தலில் ஓட்டு போடுவது மற்றும் பணம் வாங்காமல் ஓட்டுப் போடுவது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம்.
வருகிற தமிழக சட்டசபை தேர்தலில், எப்படியாவது அதிக சதவிகித ஓட்டுக்களை பதிவு செய்ய வைக்க வேண்டும் என்றும், ஓட்டுப் போடாமல் இருப்பவர்களை எப்படியாவது ஒட்டுப் போட வரவழைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் பல வழிகளில் முயன்று வருகிறது.
இந்த முறை 100 சதவிகித ஓட்டுப்பதிவு என்ற தாரகத்தை கையிலெடுத்த தேர்தல் ஆணையம், தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் பேசி, புகழடைந்த சில வசனங்களை மாற்றியமைத்து பயன்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பல மீம்ஸ்களை போட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
பாட்சா படத்தில் ரஜினி பேசிய வசனத்தை சற்று மாற்றியமைத்து “ஒரு தடவை நீங்க காசு வாங்கினா, அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி” என்றும், போக்கிரி படத்தில் நடிகர் விஜய் பேசி புகழடைந்த வசனத்தை மாற்றி “ ஒரு தடவ முடிவு பண்ணிட்டா மத்தவங்க பேச்சை கேட்காதீங்க.. பணம் வாங்காம ஓட்டு போடுங்க...” என்று தெறிக்க விடுகிறார்கள்
அவர்கள் உருவாக்கியுள்ள சில பஞ்ச வசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இங்க என்ன சொல்லுது.. பணம் வேணாம் வேணாம்னு சொல்லுதா..
கடமைய செய்ய பணத்தை எதிர்பார்க்காதே.. போடுவோம் ஒட்டு.. வாங்க மாட்டோம் ஓட்டு..
எப்ப தருவாங்க எப்படி தருவாங்கனு யாருக்கும் தெரியாது.. ஆனா தரும்போது வாங்காதீங்க..
காசு பணம் துட்டு ஒழி ஒழி
காசு ஆடம்பரம்.. வோட்டு அத்தியாவசியம்.. என்று இறங்கியடிக்கிறார்கள்
மேலும், இதுபோல் அழகிய பஞ்ச் அனுப்புவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே நெட்டிசன்கள் ஏராளமான பஞ்ச்களை அள்ளி தெளித்து வருகிறார்கள்..
அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
நோட்டுக்கு ஒட்டு.. நாட்டுக்கு வேட்டு..
வேற ஊரில் இருந்தாலும் வந்து போடுங்க ஓட்டை.. அப்பதான் திருத்த முடியும் நம் நாட்டை...
நாக்கு இல்லாமல் சொல் இல்லை.. உங்கள் வாக்கு இல்லாமல் நாடில்லை..
வோட்டின் பலம்.. நாட்டின் நலம்... என்று நீள்கிறது..
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
No comments :
Post a Comment