விஜயகாந்த் அமைதியாக இருக்க வைகோ ஏன் சீறுகிறார்? : பழ.கருப்பையா கேள்வி

Share this :
No comments

தேமுதிகவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசலைக் கண்டு விஜயகாந்த் அமைதியாக இருக்க வைகோ ஏன் கோபப்படுகிறார் என்று முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா கேள்வி எழுப்பியுள்ளார். தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் உட்பட பலரும் விஜயகாந்திற்கு எதிராக திரும்பியுள்ளனர். மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தவறு என்றும், திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். எனவே அவர்கள் அனைவரையும் தேமுதிக தலைமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. இருந்தும் அவர்கள் அதே கருத்தை கூறி வருகின்றனர். இந்நிலையில், அதுபற்றி கருத்து தெரிவித்த பழ.கருப்பையா “தேமுதிகவிலிருந்து சில எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் வெளியேறுவது குறித்து விஜயகாந்த் பதட்டப்படவில்லை. மாறாக, அவருடைய கூட்டணி சேர்ந்த தலைவர்கள்தான் அதிகம் பதறுகிறார்கள். நான் கேட்கிறேன், வைகோ எதற்காக இப்படி ஆவேசப்படுகிறார்? தேமுதிக எம்.எல்.ஏக்களும், மாவட்ட செயலாளர்களும் ரூ.3 கோடி, திமுகவிடம் வாங்கிக் கொண்டு, விஜயகாந்திற்கு எதிராக திரும்பியுள்ளதாக வைகோ கூறியுள்ளார். இதற்கு முன், சில தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் தாவிய போது, வைகோ ஏன் இந்த குற்றச்சாட்டை கூறவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

No comments :

Post a Comment